பைபிள்களை திருப்பித்தர மறுக்கும் ஜாயிஸ் மீது வழக்கு தொடுக்கலாம்

 

Abdul aziz Bari on Chin Pengமலேசிய பைபிள் கழகத்திலிருந்து ஜனவரியில் கைப்பற்றிச் சென்ற மலாய் மற்றும் இபான் மொழிகளிலான 321 பைபிள் பிரதிகளை சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா திருப்பித்தர மறுத்தால் மலேசிய பைபிள் கழகம் அதன்மீது வழக்கு தொடுக்கலாம் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி இன்று கூறினார்.

சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயில் மலேசிய பைபிள் கழகத்தின்மீது வழக்கு தொடுக்கப்படாது என்று அறிவித்திருந்த போதிலும், ஜாயிஸ் இதுவரையில் அது கைப்பற்றிய பைபிள் பிரதிகளை திருப்பித்தர மறுத்து வருகிறது.

“முஸ்லிம் அல்லாதவர்கள் எப்படி அவர்களுடைய சமயத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை முறைப்படுத்தும் அதிகாரம் ஜாயிஸ்சுக்கு, ஏன் சுல்தனுக்குக்கூட, கிடையாது”, என்று அப்துல் அசிஸ் மலேசியாகினியிடம் கூறினார்.

“நான் சொல்ல வருவது, மலேசிய பைபிள் கழகத்திற்கு வேறு வழிகள் ஏதும் இல்லாமல் இல்லை”, என்று அவர் மேலும் கூறினார்.

“நீதித்துறை, பொதுச் சேவை மற்றும் இதர தேர்தல் ஆணையம் போன்ற தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகள் இது ஒரு ஜனநாயக நாடு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்”, என்றார் அப்துல் அசிஸ் பாரி.

 

 

 

TAGS: