உங்கள் கருத்து: ஹிம்புன் பெரிய தோல்வி

“ஹிம்புன் பேரணிக்கு 3,000 முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்தன. அவை ஒவ்வொன்றும் தங்கள் தலைவரையும் துணைத் தலைவரையும் அனுப்பியிருந்தால் கூட எண்ணிக்கை 6,000-ஆக இருக்கும்.”

ஹிம்புன் பேரணிக்கு 5,000 பேர் வந்தனர்

ஸ்விபெண்டர்: குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கூடியதே உண்மை நிலையை உணர்த்துகிறது. இனம், சமயம், அரசர் அமைப்பு முறை ஆகியவற்றை பயன்படுத்தி மக்களை பிரித்து ஆளும் பழைய தந்திரமே அது.

மலேசியர்கள் அரசியல் ரீதியில் விழித்து கொண்டு விட்டனர். முதிர்ச்சி அடைந்து விட்டனர். வெளிப்படையான போக்கு, பொறுப்பு, நீதி, நியாயம் ஆகியவையே நமக்கு இப்போது மிக முக்கியம். அரசாங்கம் நல்ல ஆளுமையைத் தர வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.

அதிகரித்து விட்ட வாழ்க்கைச் செலவுகள், பணத்தின் கொள்முதல் சக்தி குறைவது, ஊழல், வாய்ப்புக்கள் குறைவது, நியாயமற்ற போக்கு, சம நிலையில்லாத கவனிப்பு, இனவாதம் எல்லா வகையான தீவிரவாதம், சட்ட விரோதக் குடியேற்றக்காரர்  ஆகிய பல கடுமையான பிரச்னைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

இன அரசியல் விளையாட்டுக்காக பணத்தையும் நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்வதைக் காண நாங்கள் விரும்பவில்லை.

முகமட் ராட்சி இப்ராஹிம்: ஹிம்புன் பேரணிக்கு 3,000 முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்தன. அவை ஒவ்வொன்றும் தங்கள் தலைவரையும் துணைத் தலைவரையும் அனுப்பியிருந்தால் கூட எண்ணிக்கை 6,000-ஆக இருக்கும்.

முஸ்லிம்களாகிய நாமே அதற்குக் காரணம். நமது சொந்த சமய நம்பிக்கையை ஏன் வலுப்படுத்தக் கூடாது? கிறிஸ்துவர்கள் நம்மை மதம் மாற்றவில்லை. நாம்தான் மாறுகிறோம்.

திரு டி: தாங்கள் வெற்றியைத் தரும் கருப் பொருளைக் கொண்டிருப்பதாக ஹிம்புன் ஏற்பாட்டாளர்கள் கருதினர். அதனால் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பங்கு கொள்வர் என பறை சாற்றிக் கொண்டனர்.

பாசத்துக்குரிய நமது நாட்டை நேசிக்கின்ற பெரும்பாலான முஸ்லிம்களிடம் அந்தக் கருப் பொருள் செல்லுபடியாகவில்லை. ஆகவே நாம் காரணங்களுக்காகக் காத்திருப்போம்.

கேஎஸ்என்: குறைந்த எண்ணிக்கையில் மக்கள் அதில் கலந்து கொண்டிருப்பது, அம்னோவுக்கும் சமயத் தீவிரவாதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தெளிவான செய்தியாகும். தங்கள் சொந்த நலனுக்காக யாரும் மலாய் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதே அந்தச் செய்தி ஆகும்.

அந்த அரங்கத்தில் 80,000 பேர் அமருவதற்கு வசதி இருப்பதை பார்க்கும் போது ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் அது பத்து விழுக்காட்டுக்கும் குறைவாகும்.

தாங்கள் தோல்வி அடைந்து விட்டதை ஹிம்புன் ஏற்பாட்டாளர்கல் ஒப்புக் கொள்வர் என நான் நம்புகிறேன்.

பேஸ்: ஒன்றுமில்லாத விஷயத்துக்கு இவ்வளவு பெரிய ஏற்பாடா? முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவது பிரச்னை என்றால் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த போதுமான சட்டங்கள் உள்ளன.

முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் நடத்திய அந்தக் கூட்டம் தேவை இல்லாதது. தென்கிழக்காசியாவை ஐரோப்பியக் கிறிஸ்துவர்கள் 400 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம்/சுதேசிகளில் சிறிய எண்ணிக்கையிலான மக்களே மதம் மாறியுள்ளனர்.

இப்போது முஸ்லிம் மக்கள் நன்கு கல்வி கற்றுள்ளனர். ஆனால் மதம் மாற்றம் பற்றிய அச்சம் மேலோங்கியுள்ளது. அது வினோதமாக இருக்கிறது.

கேகன்: போலீஸ் பாதுகாப்பு அளித்த, அம்னோ அங்கீகாரம் அளித்த பேரணிக்கு 5,000 பேர்தான் வந்தார்களா? பெருத்த அவமானமாக இருக்கிறது.

சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டு கண்ணீர்ப் புகை, கைது நடவடிக்கை, இரசாயனம் கலந்த நீர் ஆகிய மருட்டல்கள் இருந்தும் பெர்சே 50,000 பேரை ஈர்த்தது.

அது ஒரு புறம் இருக்க, அதில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் அம்னோ எவ்வளவு பணம் கொடுத்தது?

டூட்: நாளை தலைப்புச் செய்திகள்” ஹிம்புன் நிகழ்வு பெரிய தோல்வி.”

வணிகர்: அரசாங்கம் முழுக்க முழுக்க ஆதரவு அளித்த ஒரு பேரணி 5,000 பேரை மட்டுமே கவர்ந்ததா? எப்படி பொதுத் தேர்தலை நடத்துவது?

TAGS: