அல்லா என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்த பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு கத்தோலிக்க வாராந்தர வெளியீடான த ஹெரால்ட்டை மட்டுமே கட்டுப்படுத்துவதால், கிறிஸ்தவர்கள் அல்லா என்ற சொல்லை தொடார்ந்து பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் கூறுகிறது.
அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்த அதன் 10 அம்சத் திட்டத்தை தொடர்ந்து கடைபிடிக்கும் என்று அரசாங்கம் வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கை கூறுகிறது.
“அரசாங்கம் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறது. அனைவரும் அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
“தீர்ப்பு த ஹெரால்ட் அல்லா என்ற சொல்லை பயன்படுத்துவதை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. மலேசிய கிறிஸ்தவர்கள் அல்லா என்ற சொல்லை தேவாலயத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம்”, என்று அப்பேச்சாளர் கூறினார்
1963ல் ஒப்பந்தமான 20 அம்சத் திட்டத்தில் குறிப்பிட்ட உரிமை இன்று நீதிமன்றத்தின் தீர்ப்பின்வழி புறக்கணிக்கப்பட்டுள்ளது… கூட்டரசு அமைப்பில் குறிப்பிட்ட சமய உரிமையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது… இதில் அண்மையில் பிரதமர் கூறிய 10 அம்சத் திட்டம் எம்மாத்திரம்??? இப்போதுதான் அம்னோ ஆட்டம் ஆரம்பமாகிறது.
அதே சமயத்தில் முஸ்லிம்கள் “தா ஹெரால்ட்” பத்திரிக்கையைப் படிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வரலாம்! அது சரி நீதிபதிகள் ஏன் இந்தப் பத்து அம்சத் திட்டத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை?
ஐயா, இந்த 10 அம்ச திட்டம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமே தவிர சட்டமல்ல!!!!. உயர்நிலை கூட்டரசு அரசமைப்பு சட்டத்தையே புறக்கணித்து தீர்ப்பளித்த இந்த நீதிபதிகள் 10 அம்ச ஒப்பந்தத்தையா கருத்தில் கொள்வர்?? ஒருகாலும் நடவாது…அம்னோவின் அரசியல் நாடகத்தின் முதல் பாகமே இது!!!!!
அல்லாவின் பெருமைகளை போதனைகளை யார் பேசினாலும் அது ஸ்லாதிர்க்கு பெருமைதானே ..? எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் .!
எனக்கு ஒரு சந்தேகம் . இறைவ ன் என்ற ஒருவர் இருகிறார ? சமயம் பெயரில் இப்படி எல்லாம் அடித்து கொள்கிறார்களே ! அத லால் தன்