தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டும் வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும் சேர்ந்து இனவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்க்க ஒரு புதிய அரசுசாரா அமைப்பை(என்ஜிஓ) உருவாக்கியுள்ளனர்.
“நாட்டை மீட்டெடுக்கும் மக்கள் இயக்கம் (நெகாரா கூ)” என அதற்குப் பெயரிடப்பட்டிருக்கிறது.
அதன் தொடக்கவிழாவில் பேசிய அம்பிகா, பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் இன, சமய வாதங்கள் பெருகி வருவதாகக் குறிப்பிட்டார். அதைப் பார்க்கையில் சில தரப்பினர் குழப்பத்தை உண்டுபண்ணுவதை “உள்நோக்கமாக”க் கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது என்றாரவர்.
சமட், அம்பிகா இருவருமே தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே-இன் முன்னாள் தலைவர்களாவர். அவர்களுட்ன் முன்னாள் நீதிபதியும் மனித உரிமை ஆணையருமான சைமன் சிபோனும் இணைந்துகொண்டிருக்கிறார்.
அண்மைய ஆண்டுகளில் பல என்ஜியோக்களின் அழுத்தத்திற்குப் பிறகு, மெத்தனமாய் இருந்த பாரிசான், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது. பினாங்கும் சிலாங்கூரும் பக்காத்தான் ஆட்சிக்கு கைமாறியது. மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சியின் பெரும்பான்மை வெகுவாகக் குறைந்துள்ளது. பேராக் மறுபடியும் பாரிசான் கையில் விழுந்தது. இதிலிருந்து என்ன புலப்படுகிறது? மக்கள், குறிப்பாக வளரும் சமுதாயத்தினர் நாட்டு நடப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி உள்ளனர். பல்லின மக்களின் நலனுக்காக என்ஜியோக்களால் தொடுக்கப்பட்ட அழுத்தம் அரசியல்வாதிகளை குடையத் தொடங்கியுள்ளது.. ஆளும் கட்சியையும் கதிகலங்க வைத்துள்ளது. எதிர்பாரா சில சிறந்த மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை. உண்மையான மக்களாட்சி மலர வாழ்த்துகள். இம்மாதிரியான என்ஜியோக்களின் அழுத்தம் இல்லையேல், மக்களின் கோரிக்கைகள் எருமை மீது பெய்த மழைபோல் ஆகிவிடும். குறிப்பிட்ட ஒருசில இனவாதிகள், சுயநலவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து தலைவிரித்தாடும். பல்லின மக்களின் ஒற்றுமைக்கு வித்திடும் எந்தவொரு அழுத்தத்துக்கும் மக்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும்….இருக்கவும் வேண்டும்!!!! தொடரட்டும்!!!!
நல்ல புனிதமான நோக்கங்க்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
சரியான நேரத்தில் விவேகமான முடிவு!! வாழ்த்துக்கள் அம்பிகா அவர்களே. தொடரட்டும் உங்கள் நற்பணி.
இன பிரிவினையை தூண்டி நாட்டில் குழப்பத்தை ஏற்ப்படுத்த நினைக்கும் தீவிர வாதிகளுக்கு சரியான தண்டனை வழங்கும் விதத்தில் நீங்கள் அமைக்கும் அமைப்பு செயல் பாட்டினை கொண்டு இருக்க வேண்டுமென தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.
வெரி குட் ஸ்டார்டிங் excellent.
நல்ல மனம் வாழ்க
தேசிய இனவாதிகளை ஒடுக்க நீங்கள் ஏற்படுத்திய இயக்கத்திற்கு என் பாராட்டுகள் ,ஆனால் உங்கள் இயக்கத்தை
எதிர்கட்சிகள் தங்களில் ஆர்பாட்டத்திற்கு சாதகமாக பயன்படுத்தாமல் பார்த்துகொண்டால் எல்லோருக்கும் நல்லது
இல்லை என்றல் அறிவு இல்லாத சில மதவாதிகள் அரசியல்
வாதிகள் நடவடிக்கை வேண்டும் என்று உங்கள் பெயரை கெடுக்க பல அநாகரீக செயலில் ஈடு படுவர் காரணம் அறிவிலிகள் அயோக்கியர்கள் மாமி .
அம்பிகாவுக்கு வேற வேலை இருந்த போய் பாக சொல்லுங்க ஒரு இடியாப்பம் கடை ஜாக பண்ண சொல்லுங்கட
அம்பிகாவுக்கு வேற வேலை இருந்த போய் பாக சொல்லுங்க ஒரு இடியாப்பம் கடை ஜாக பண்ண சொல்லுங்கட (பெர்செஹ்)
வீட போய் சுதம் பண்ண சொல்லுங்க
அமைதிக்காக நாம் எத்தனை NGO கள் அமைத்தாலும் ஒன்றும் நடக்காது. காரணம் அரசாங்கமே இன வாதத்தையும் மதவாதத்தையும் அப்பட்டமாக ஆதரித்தும் தூண்டியும் அத்துடன் பிரதமனே ISIS விசிறியாக இருக்கும் போது எப்படி இங்கு அமைதியும் சுபிட்சமும் இன ஒற்றுமையும் மத நல்லிலக்கனமும் இருக்க முடியும்? இந்நாட்டில் இனி என்றுமே UNITY IN DIVERSITY -பிரினையில் ஒற்றுமை – கிடையாது.
எனக்கு இப்படி நடுக்கும் என்று தெரியாம போச்சி இல்லன நான் PAS கட்சிக்கு பங்க பனிருபேன் நாய் பசங்க நம்ப மக்கள் பெரச்யனைய எவனும் கேட்க மட்டன்
இங்கு அரசியலில் ஞானம் பெற்றவர் முதிர்ச்சி பெற்றவர் சிலரே என்பது தெரிகிறது யாமும் உற்பட,அரசியல் என்பது பெரிய விசயம்.நாராயண நாராயண.
அரசியலில் யாரும் ஞானம் பெற தேவை இல்லை–நியாயத்துடனும் மனிதாபிமானதுடனும் ஊழல்வாதி இல்லாமலும் இருந்தாலே போதும். தில்லு முள்ளு செய்வதற்கே ஞானம் தேவை.