மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய உலகம் முயன்று கொண்டிருக்கும் வேளையில், நேற்றிரவு நியு யோர்கில் உள்ள மலேசியர்கள் அச்சம்பவத்தில் உயிரிழந்த 298 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
மலேசியர்களுடன் அமெரிக்கர்கள், சிங்கப்பூரர்கள், மொரோக்கோ நாட்டவர், இந்தோனேசியர்கள் என சுமார் 60பேர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு வாஷிங்டன் சதுக்கப் பூங்காவில் திரண்ட அவர்கள் மலர்களை வைத்தும் மெழுகுதிரிகளை ஏற்றிவைத்தும் பிரார்த்தனை செய்தும் இறந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவித்தனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.அதே வேளையில் இந்த சதி நாச வேலையில் இடுபட்டவர்களை உலக நாடுகள் மலேசியாவுக்கு உறுதுணையாக நின்று இந்த கொடும்பாவிகளை நீதியின் முன் நிறுத்தி தண்டனை கிடைக்க உதவ வேண்டும்.