பிகேஆர் யாரை மந்திரி புசாராக முன்மொழிந்தாலும் அவரை டிஏபி ஆதரிக்கும். நடப்பு மந்திரி புசார் காலிட் இப்ராகிமிடம் பொறுமை இழந்ததன் விளைவாக அது இம்முடிவுக்கு வந்துள்ளது.
“மந்திரி புசாரிடம் இப்போதெல்லாம் பேச முடிவதில்லை”, என சிலாங்கூர் டிஏபி-இன் மூத்த அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் அலுத்துக் கொண்டார்.
யாருடைய கருத்தையும் காலிட் கேட்பதில்லை என்றாரவர்.
“தமக்கு மட்டும்தான் சிந்திக்கத் தெரியும் என்பதுபோல் நடந்துகொள்கிறார்”, என்றவர் கடுப்பாகக் கூறினார்.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கை விட காலித் இப்ராஹிம் எவ்வளவோ மேல். முதலில் உங்களது முதுகைப் பாருங்கள் நைனா!
டி.ஏ.பி. இப்ப எல்லாம் சொல்லுவானுங்க. இதுக்கு மேலேயும் சொல்லுவாங்க.
இது அரசியல் பூ,டி.ஏ.பி சலாங்கூர் அரசுக்கு ஆதரவாம் பாஸ் எம்.பிக்கு ஆதரவாம்.ஆக பாஸ் ஆதரவாலர் ஜெய்ப்பார் காரணம் பாஸ் நாட்காலி அதிகம்.ஒரு யூகமே.வாழ்க நாராயண நாமம்.
காலித் இப்ராஹிம் விட பினாங்கு முதலமைச்சர் லிம் வ்வளவோ மேல். முதலில் உங்களது முதுகைப் பாருங்கள் தலைவா