“ஆகவே ஹிம்புன் மற்ற சமய அமைப்புக்களை சிறுமைப்படுத்துகிறது என்பது முக்கியமல்ல. தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கு பெர்சே வேண்டுகோள் விடுத்ததுதான் தவறா?”
ஹிம்புன், பெர்சே போன்று அல்லாமல் ஒழுங்காக நடந்ததாக பிரதமர் புகழாரம்
பிராமன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்ற மலேசியர்களைப் போன்று ஒரே கோளத்தில்தான் வாழ்கிறாரா? பெர்சே 2.0 ஆர்ப்பாட்டங்கள் தொடங்குவதற்கு முன்னரே மஞ்சள் டி சட்டைகளை அணிந்துள்ளவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டது அவரது உள்துறை அமைச்சர்தானே?
அரங்கத்தை வழங்குவதாகச் சொல்லி விட்டு பின்னர் அதனை மாற்றியது அவர் இல்லையா? ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக பெரும்பாலான ஹோட்டல்களில் பெர்சே ஆதரவாளர்கள் இருக்கின்றனரா என்பதைச் சோதனை செய்தது போலீஸ் இல்லையா?
அவரது உள்துறை அமைச்சில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் ஏன் மருத்துவமனை மீதும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதும் நீரைப் பாய்ச்சியதும் அவரது உள்துறை அமைச்சின் கீழ் வரும் போலீஸ் இல்லையா?
அந்த ஹிம்புன் பேரணிக்கு முன்னதாக நஜிப் அதனைச் செய்திருந்தால் விளைவுகள் வேறாக இருந்திருப்பது திண்ணம். உண்மையில் அதில் பங்கு கொண்டவர் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் குறைவாக இருந்திருக்கும்.
ரூபன்: திரு பிரதமர் அவர்களே, உங்களுடன் முழுமையாக மாறுபடுவதற்கு என்னை மன்னியுங்கள். பெர்சே அமைப்புக்கு பல நிபந்தனைகளுடன் அரங்கத்தை வழங்க முன் வந்தீர்கள். பின்னர் நீங்கள் அதனையும் மீட்டுக் கொண்டு பெர்சே விரும்பும் அரங்கத்தில் அது நடைபெற முடியாது எனக் கூறினீர்கள்.
ஆகவே தயவு செய்து மக்களைத் தவறாக வழி நடத்த வேண்டாம். எல்லாவற்றுக்கும் மேல் முதலாவதாக மதம் மாற்றத்துக்கான ஆதாரம் ஏதுமில்லை என பாஸ் உட்பட பல்வேறு தரப்புக்கள் கூறியிருப்பதால் அத்தகைய பேரணியை ஹிம்புன் நடத்தியிருக்கவே கூடாது.
நீங்கள் தொடங்கியுள்ள சீர்திருத்த முயற்சிகளையும் நான் முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை. உண்மையில் இரட்டை வேடம் போடுவதின் மூலம் நீங்கள் உண்மையான ஜனநாயகத்தையும் மக்களுடைய அவாக்களையும் ஒடுக்குகின்றீர்கள்.
உங்கள் அரசாங்கம் பெரிதாக்குகின்ற இனவாத, சமயப் பதற்ற நிலையினால் நாம் முன்னைக்காட்டிலும் மோசமான நிலையில் உள்ளோம்.
நம்பிக்கை: நன்றாகச் சொன்னீர்கள் நஜிப் அவர்களே. பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் அவருக்குப் பதில் சொல்ல வேண்டும். அல்லது அவர் இன்னும் தமக்குக் கிடைத்த பதக்கங்களுக்கு மெருகூட்டிக் கொண்டிருக்கிறாரா?
குழப்பத்தை ஏற்படுத்துவது பெர்சே பேரணியின் நோக்கம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அத்துடன் அது மறைமுகமான நோக்கத்தையும் கொண்டிருந்தது. மக்களுக்கும் அது தெரியும்
சிறப்பாக நடத்திய ஹிம்புன் அமைப்புக்குப் பாராட்டுக்கள். வெற்றியோ தோல்வியோ ஒரு ஜனநாயக நாட்டில் என்ன செய்ய வேண்டுமோ அதனைப் போன்று நீங்கள் செய்துள்ளீர்கள்- அதாவது ஒன்று கூடுவதற்கான உரிமையை பயன்படுத்திக் கொண்டுள்ளீர்கள். அதே வேளையில் மற்றவர்களுடைய உரிமைகளுக்கும் பங்கம் விளைவிக்கவில்லை.
பிரா ஒங் சாவ்: ஆகவே ஹிம்புன் மற்ற சமய அமைப்புக்களை சிறுமைப்படுத்துகிறது என்பது முக்கியமல்ல. தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கு பெர்சே வேண்டுகோள் விடுத்ததுதான் தவறா?
சின்ன ஹான்2: ஹிம்புன் பேரணியை அங்கீகரித்துள்ளதின் மூலம், பிரதமர் மலேசியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு கிறிஸ்துவ சமயம் ஒரு மருட்டல் எனக் கூறும் ஹிம்புன் போராட்டத்துக்கு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளார்.
அந்த அங்கீகாரம் பிரதமருடைய வழக்கமான குறுகிய கண்ணோட்டத்தைக் காட்டுகிறது. அது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நான் ஏமாற்றப்பட்டதாக உணருகிறேன், பிரதமர் அவர்களே.
சுதந்திர மலேசியா: இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் சமய அவநம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்தை ஹிம்புனை நஜிப் பாராட்டுகிறார்.
அதே வேளையில் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே 2.-ஐ அவர் சாடுகிறார்.
நமக்கு கிடைத்துள்ள பிரதமரைப் பார்த்தீர்களா? அவர் சொல்கின்ற “மிதவாதிகளின் உலக இயக்கம்” அவ்வளவுதான். ஒரே மலேசியாவைப் போன்று அதுவும் ஒன்றுமில்லாதது. கேலிக் கூத்தானது.
தூய்மையான மலேசியன்: பிரதமர் அவர்களே, முதலாவதாக போலீஸ் பெர்சே-க்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. இரண்டாவதாக குழப்பம் ஏற்படும் முன்னர் மக்கள் மீது போலீஸ், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. நீரைப் பாய்ச்சியது. ஆகவே யார் மீது தவறு?
பெர்சே 3.0க்கு அனுமதி கொடுங்கள். போலீஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்காமல் இருக்கட்டும். அப்புறம் இரண்டு நிகழ்வுகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதனைச் செய்வதற்குத் துணிச்சல் உண்டா?