முஜாஹிட் யூசுப் ராவா, பக்கத்தான் ரக்யாட்டே முதிர்ச்சிபெற்ற அரசியலுக்கான சிறந்த தளம் என்று நம்புகிறார்.
நாட்டில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ண, ஒரு புதிய அரசியலை உருவாக்க, அரசியல் முதிர்ச்சி மிகவும் அவசியம் என்று பாஸ் பாரிட் புந்தார் எம்பி வலியுறுத்தினார்.
பக்கத்தான் சில பிரச்னைகளை எதிர்நோக்கினாலும் பக்கத்தான் ரக்யாட் இல்லாத மலேசியாவைத் தம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றாரவர்.
“பக்கத்தான் உடைந்து நாட்டில் அரசியல் அரங்கிலிருந்து மறைந்து போகுமானால் புதிய அரசியல் பற்றிய கனவு என்னவாகும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை”, என்று முஜாஹிட் ஓர் அறிக்கையில் கூறினார்.
“வாக்காளர்கள் இப்போதெல்லாம் இனத்தின் அடிப்படையில் அல்லாமல் சிறந்த தேர்தல் கொள்கைஅறிக்கையின் அடிப்படையில்தான் வாக்களிக்கிறார்கள்.
“பக்காத்தான் இனமென்னும் சுவரைத் தகர்த்தெறிந்துள்ளது”, என்றாரவர்.
அப்படியானால் எதற்கு சில உஸ்தாத் கொள்கை பரப்பாளர்கள் இனம்,மதத்தை கேவல படுத்தி பேசுகிறார்கள் கூரமுடியுமா முஜஹிட் யூசுப் ராவா …..
இன்றைய சூழலில், நம் நாட்டிற்கு பக்காத்தானே சிறந்த தேர்வு என நானும் ஆணித்தரமாகவே கூறுகிறேன். ஆனால், அங்கே உள்ளோர் பெரும்பாலோர் பதவிப்பித்து பிடித்து அலைந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முஜாஹித் அறியாததல்ல. ‘அரசியல் முதிர்ச்சி மிகவும் அவசியம்’ என முஜாஹித் கூறுகிறார். தெலுக் இந்தானில் போட்டியிட ‘அரசியல் சூரப்புலி’ டயானா தான் உங்களுக்கு கிடைத்தாரா? மக்கள் வைத்தார்களே ‘ஆப்பு’. பண்பட்ட, முதிர்ச்சி பெற்ற, அரசியல் சாணக்கியர்கள் உங்கள் கூட்டணியில் கிடையாதா?
தெலுக் இந்தானில் இன அரசியல் விளையாடியது பெரும்பாலோர் அறிந்ததே. இதனால் நாடாளுமன்றத்தில் டிஏபிக்கு ஒரு சீட் குறைந்ததே தவிற டிஏபி அரசியல் சாசனத்தில் பெரும் பாதிப்பு ஒன்றுமில்லை. அதே வேளையில், சீனர்களுக்கான குரல் ஓங்க ஆளும் கட்சியில் இன்னொரு திறமைகொண்ட சீன நாடாளுமன்ற உறுப்பினர்.!!!!
சிங்கம் இது ராஜதந்திரம்,மலாய்ஸை உள்ளே விட்டு டி.ஏ.பி,யில் சீனரின் ஆதிகத்தை மட்டுப்படுத்தவே இந்த என்ட்ரி,பினாங்கில் டி.ஏ.பி,யில் சீனர் சாம்ராஜியம்.இது வும்னோவின் வேலையே,சும்மா நடிக்கின்றனர் வும்னோகாரன் ராஜ தந்திரம் சிங்கம் ராஜ தந்திரம்,நாராயண நாராயண.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான் சாம் துயரம் தரும் அதாவது,திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்கு துயரத்தை உண்டாக்கி விடும்,மற்றும் நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு அதாவது,நட்பு என்பது சிறித்து மகிழ்வதற்காக அல்ல நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துறைத்துத் திருத்துவதற்காகும்.ஆதலால் எது நட்பு என்பதை தெரிந்து தெளிக,வாழ்க நாராயண நாமம்.