சிலாங்கூரின் அடுத்த மந்திரி புசாராவதற்கான தகுதியான வேட்பாளர் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்தான் என்பது பெரும்பாலோர் விருப்பமாக இருப்பது மெர்டேகா மையம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
மாற்று வேட்பாளராகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அஸ்மின் அலிக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. ஆறு விழுக்காட்டினரே அவர் எம்பி ஆவதை விரும்புகிறார்கள். அதேவேளை, பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் எம்பி ஆவதை 12 விழுக்காட்டினர் ஆதரிக்கின்றனர்.
அவர்கள் இருவருடனும் ஒப்பிடும்போது, 15 விழுக்காட்டினர் அம்னோவைச் சேர்ந்த ஒருவர் எம்பி ஆவதை விரும்புகிறார்கள் என்பது சுவையான விசயம்.
கருத்துக்கணிப்புக்காக மெர்டேகா மையம் 808 பேரைச் சந்தித்தது. அவர்களில் 25 விழுக்காட்டினர் வான் அசிசா எம்பி ஆவதை ஆதரித்தனர்.
ஆனால், பெரும்பாலோருக்கு, 32 விழுக்காட்டினருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
*** ஆனால், பெரும்பாலோருக்கு, 32 விழுக்காட்டினருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ***
இவர்களைப் போன்ற மக்களை வைத்துக் கொண்டா மலேசிய
அரசியல் களம் பிரமாதப் படுத்தப்படுகிறது !!!
இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் எதிரணியினர் தலை தூக்க
இயலாது .
என்னே கேவலம் …,??? இன்னுமா இந்த மக்கள் அப்படி அறிவிலிகளாக ; 43 க்கும் 13க்கும் எது பெரும்பான்மை என விளங்கிக்
கொள்ள முடியாமல் தடுமாற்றம் , வாழ்க ஏமாற்றுக் கூட்டம் !!!
ஆமாம் தலைவா ” ……… சேற்றிலே மீனை பிடித்து பாருங்கள் அது நழுவத்தான் செய்யும் .அதுபோல இங்கே நம்மக்கென்ன என்று நழுவுற கூட்டம் எங்கும் இருக்கு .இது உண்மையா இல்லையா என்பது சிலருக்கு தெரியும் .
கருத்தக் கணிப்பில் சுல்தானின் முடிவு என்ன?
பி.கே.ஆர்,கொடி எரிக்கப்பட்டது,உறுப்பினர் அடையாள அட்டையை வெட்டி வீசப்பட்டது,சில காலீட் ஆதரவாலறும் நடவடிக்கைக்குட்பட்டனர்.பி.கே.ஆர்,ரின் பெமூடா தலைவர் உறையை துவங்கியதும் அனைவரும் வெளிநடப்பு நிகழ்வு.இப்போது நேரடி தாக்குதல் அரங்கேறிவருகிறது வான் அசீசா நியமனத்துக்கு,நாராயண நாராயண.
இதுதான் அந்த ஆண்டவனின் விருப்பமும் கூட