“செலாகா” என்று சொல்லி அம்னோவை ஆத்திரம் கொள்ள வைத்த டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர்மீது நாளை தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்படும்.
நாளை பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினரான ராயர் குற்றம் சாட்டப்படுவார் என டிஏபி சட்ட விவகாரப் பிரிவுத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
“ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட அதே விவகாரத்துக்காக மறுபடியும் அவர்மீது குற்றம் சாட்டப்படுவதாக நினைக்கிறோம்” என்று கோபிந்த் கூறினார்.
இம்மாதம் மட்டும் மொத்தம் ஐந்து பக்கத்தான் பிரதிநிதிகள்மீது தேச நிந்தனைச் சட்டம் பாய்ந்துள்ளது.
என்ன செய்வது நமது போலிசுக்கு வேலை கொடுக்க வேண்டுமே…..
போலீசுக்கு வேலை கொடுக்க வேண்டாம். அம்னோ அவர்களுக்கு வேலை வைத்துள்ளது…
அதிகார வெறி பிடித்தவர்கள் ஆட்சியில் இப்படிதான் நடக்கும் .
ராயர் சீனன் tauke இருக்கும் தைரியத்தில் அப்படி உளறிவிட்டார் போலும். எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க பேசுவதற்கு..ஏன் ஐயா உமக்கு இந்த பொழப்பு ..தேவையா உனக்கு..போ பின்னால ஆப்பு காத்திருக்கு.
இனிவரும் காலங்களில் ஆகஸ்ட் 25 தேதி முதல் ஆகஸ்ட் 31 தேதி வரை “தேச நிந்தனை வாரம்” கொண்டாடபட்டாலும் ; இதை நஜிப் ஆட்சியின் சாதனை என்றும் எருமைகள் பெருமையாக கொண்டாடினாலும் ; இந்த ஒரு வார காலம் பொது விடுமுறையாக BN அரசாங்கம் அறிவித்தாலும், ஆச்சர்யம் இல்லை.
எது எப்படியானாலும் அப்படி விமர்ச்சுப்பது தவறு.கலகத்தை கலவரத்தை தூண்டும் செயலை கண்டிப்பதே கன்னியம்.பார்த்து அவருக்காவது பாதுகாப்பு கொடுங்கள் இல்லை எதையாவது வைத்து சொரிந்துவிட போகின்றனர்,வாழ்க நாராயண நாமம்.