சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளராக டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் தம் மனைவி என்பது காரணமல்ல என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்.
தம் மனைவி எம்பி வேட்பாளராக பெயர் குறிப்பிடப்படிருப்பதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு அரசியல் சர்ச்சையாக்கி, குடும்பத்தினருக்குச் சலுகை செய்வதாக கூறியிருப்பது வியப்பூட்டுவதாக அன்வார் கூறினார்.
“கட்சி வான் அசிசாவை நியமனம் செய்திருக்கிறது என்றால் அதற்கு அவர் என் மனைவி என்பது காரணமல்ல. அவர் கட்சியின் தலைவர், மலேசிய நாடாளுமன்றத்தில் எதிரணி தலைவராக இருந்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது”, என்றார்.
அதானே அப்புடி போடு தலைவரே
ஐயய்யோ !!! என்ன நீங்கள் இப்படி சொல்லி விட்டீர்கள் ???
முகைதீன், ஹிசமுடின், ஷஹிட் மற்றும் முக்ரிஸ் ஆகியோருக்கு பெரிய ஆப்பா ???
அப்படியானால் நஜிபிற்கு பின் ரோஸ்மாதான் மலேசிய பிரதமரா ???
எதிர்க்கட்சி தலைவரின் மனைவி (முதல் பெண்மணி) மாநில மந்திரி புசார் ;ஆளும்கட்சி தலைவரின் மனைவி (முதல் பெண்மணி) நாட்டின் பிரதமர். ஆஹா !! நல்லாயிருக்கே !!!
உங்கள் இரண்டுபேருகிடையில் ஏதும் ” MOU ” இல்லையே !!!
சும்மா ஒரு டவுட்டுகாக கேட்டேன் !!!
பாஸ் கட்சியை ஒதுக்குங்கள் வேண்டாம் வேறு கட்சியை சேர்த்து கொள்ளுங்கள் அடுத்த பொது தேர்தலில் நல்ல பலன் தரும்…
சுண்ணாம்பு மனைவியும் சும்மாதான் இருக்காங்க ஆனால் ராவாங் போவனும். எல்லை உரிமையா சிட்டு ஏறும்புகிட்ட கேளுங்க ஆள் ஓகே.
தரமற்ற கருத்துகளையும் அதற்கேற்றாற்போல் விமர்சிப்பதையும் தவிர்க்கவும்.
தே ஸ்தார் செய்தி,வான் அசிசா,அஸ்மின் இருவறும் சிங்கப்பூரில் பிரந்தவராம் தெரியுமா,மலேசியாவில் பிரந்தவா மாத்திரமே பதவி வகிக்கமுடியும்.வாழ்க நாராயண நாமம்.
சரி, தலைவா! நான் நம்புகிறேன். ஆனால் நம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
kayee எங்கள் தலைவர் அன்வாரின் மனைவி சிங்கப்பூரில் பிறந்தால் என்ன! அவர்களின் புதல்வி நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இசா மலேசியாவில் தானே பிறந்தார். உடனே காஜாங் சட்டமன்ற சீட்டை காலி செய்துவிட்டு, அங்கே ஓர் இடைத்தேர்தலை உருவாக்கி நுருல் இசைவை நிற்க வைத்து மந்திரி புசார் பதவிக்கு பெயர் கொடுத்து விடுவார் எங்கள் தலைவர் அன்வார்.அப்போ என்ன செய்வீர்கள்? எங்களிடம் இன்னும் நிறைய வழிகள் உள்ளன. அன்வாரா…. கொக்கா!
வான் அசிசா கெடாவில் பிறந்து ஆரம்ப கல்வியை அலோஸ்டாரில் பெற்றுள்ளார். ஆனால் வேலையற்றவர்கள் அதன் மீது வீண் விவாதம் செய்கிறார்கள். இந்தோனிசியா ஜாவாவில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை இங்கு கற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல், உயர்நிலைக் கல்வியையும் பின் பட்டப்படிப்பையும் இங்குள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயின்ற கிர்தோயோ மந்திரி புசார் ஆனது குறித்து இன்றைய புத்திமான்கள் எல்லாம் கேள்வி எழுப்ப வில்லை. அடுத்த நாட்டில் பிறந்து இந்நாட்டு செலவில் உயிர்க் கல்வியை இலவசமாக பெற்று இம்மாநிலத்திற்கு மந்திரி புசாராகலாம். அதற்கு தேவை மகாதீர் போன்ற ஒரு சர்வாதிகாரி, அம்னோ போன்ற ஒரு இயக்கம். என்ன இளப்பமா இருந்தா வழியில போரது வரது எல்லாம் மச்சினிச்சி உறவு கொண்டாடுமாம்? பாஸ் ஆதரவு இந்தியர்கள் கிளப் இந்தியர்கள் துணிவாக தங்கள் கருத்தை வெளியிட வேண்டும்.
(அழுக்காறாமை,வெஃகாமை,புறங்கூறாமை,பயனில சொல்லாமை) இவைகள் அடக்கமின்மையால் ஒழுக்கமின்மையால் தீவினையச்சம் இல்லாமையால் மேல் குறித்த தீய குணம் ஏற்படுத்தும்.ஆகையால் தீவினையச்சம்,அடக்கம் மற்றும் ஒழுக்கம் இருந்தால் தான் புகழ் அடையமுடியும் என்பதை அன்வரிடம் சொல்லுங்கள்,கேளுங்கள் ஏன் திருட்டுபொளப்பு என்று.அன்வர் அடக்கம்,ஒழுக்கத்தை இழந்து தீவினை செய்ய துணிந்துவிட்டான்.சிங்கம்,மிக தெழிவாக புரிந்துக்கொண்டீர்,சந்தோஷம்.இவ்வளவு நடந்தும் அந்த தீயவனுக்கு ஆதரவாக பேசுகின்றனர்,”இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா சிங்கம்”.வாழ்க நாராயண நாமம்.
kayee !அரசியலில் ‘தந்திரம்’ இருக்கலாம். தப்பில்லை. ஆனால் சுயநலம் கூடாது. அன்வாருக்கு சுயநலம் கண்களை மறைத்துவிட்டது. மந்திரி புசார் பொறுப்புக்கு வான் அசிசா தகுதியானவரே. மறுக்கவில்லை. ஆனால், சிலாங்கூர் சட்டப்பேரவையில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட பக்காத்தான் உறுப்பினர்களில் அசிசாவை தவிர்த்து வேறு எவருக்குமே அப்பொறுப்புக்கு தகுதி கிடையாதா? தன் பெண்டாட்டிதான் அங்கே உட்காரவேண்டும், வேறு யாரையும் விடமாட்டேன் என்பது அன்வாரின் எண்ணம். இதற்காக மக்களை முட்டாளாக்கி காஜாங்கில் இடைத்தேர்தல். நல்ல வேலை, லெம்பா பந்தாயில் அன்வாரின் மகள் நுருல் வெற்றி பெற்றுவிட்டார், இல்லையேல், காஜாங் இடைத்தேர்தலில் நுருல் தான் வேட்பாளர். வெற்றிபெறும் நுருல்தான் மந்திரி புசார். இப்போது நடப்பதுபோன்றே சர்ச்சைகள் தொடர்ந்திருக்கும். ‘இளையவர்கள் மந்திரி புசார் ஆவதை அம்நோவோடு சேர்ந்து,காளிட்டும், பாஸ் கட்சியும் சதி செய்கிறது, இளையோர்களே! டத்தாரன் மெர்டேக்காவில் வரலாறு கானா கூட்டம் நடத்துவோம், வாருங்கள். இளையோர்களை மதிக்காத இவ்வரசுக்கு புத்தி புகட்டுவோம், வாருங்கள்.’ என்று இளைஞர்களின் மனதில் குழப்பத்தை உண்டுபண்ணி பறைசாற்றியிருப்பார், அன்வார். அன்வார் இருக்கும்வரை பக்காத்தான் ‘புத்ராஜெயாவை’ நெருங்குவது கடினம். பக்கத்தானின் ஆதரவாளர்களாகிய நாம், காலண்டரில் ‘செப்டெம்பர் 16’யை பார்த்து பார்த்து பெருமூச்சு விடவேண்டியத்தை தவிர வேறு என்னதான் செய்வது?
வேறு ஒருவர் மாநிலத்தில் சிறந்த ஆட்சியை வழங்கலாம் , ஆனால் அனுதாபம் கிடைக்குமா?
வான் அஸிசா ஜ.செ. க பி.கே ஆர் மற்றும் பாஸின் தேர்வுகூட. ஆக அவரின் தலைமைத்துவத்தை வைத்து பக்காத்தான் சிறப்பாக மாநிலத்தை ஆள முடியும் என்பது பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணம். ஆக, வான் அஸிசாவே அவர்களின் சிறந்த தேர்வு, ஆனால் பாரிசான் (அம்னோ) அப்படிப்பட்ட தேர்வை விரும்பவில்லை, காரணம் அதற்கே பெரிய ஆபத்து, அம்னோவில் 53 சதவீத உறுப்பினர்கள் பெண்களாம். அதன் பெரிய ஓட்டு வங்கியும் பெண்களே! இருப்பினும் வழிவழியே வந்த பழக்கத்தால் ஆண்களையே தலைமைப் பொறுப்புக்கு அம்னோவில் ஏற்கின்றனர். அப்படிப்பட்ட பெண்ணடிமைத்தனத்தை புரட்டிப்போடும் தன்மையுடையது வான் அஸிசாவின் சிலாங்கூர் தலைமைத்துவ ஏற்பு. மேலும், சில மாதங்களில் அன்வார் தண்டிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட வேளையில் வான் அஸிசா தலைமைத்துவத்தின் மீது மக்களின் அனுதாபத்தை மேலும் அதிகரிக்கும், அதனுடன் தலைமைத்துவ ஆற்றல் ஒன்று சேர்ந்தால், அடுத்த தேர்தலில் நாட்டில் ஆட்சி மாற்றத்தை எவரும் தடுக்க முடியாது. இது தான் அரசியலில் ஆடுகிர மாட்டை ஆடிக் கரப்பது. அம்னோ அழிய ஏன் வான் அஸிசா வரக்கூடாது.
அல்லது வரவேண்டும் என்பதனை முடிவு செய்ய வேண்டும்
சிங்கம்,அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டனர் சிங்கப்பூரில் பிரந்தவா யென்று,ஆனால் மஞ்சுவுக்கு மாத்திரம் திருப்தியில்லை.அரசியல் தந்திரத்தை கூட்டனிக்குல் காட்டலாமா தோழரே,பாகார் மாக்கான் பாடி.பாஸ் கட்சிக்கு தெரியாமல் இருக்காது,பாக்காதானை விட்டு விலக காரணம் வேண்டி காயை நகர்த்தி இருக்கலாம் தோனுகிறது சிங்கம்.வும்னோ பாஸ் கூட்டணி அமையும் சாத்தியம் அதிகம் நிலவுகிறது.நஜிப் சுல்தானை சந்தித்தது,இது சம்பந்தமாக பேசியிறுப்பர்,வாழ்க நாராயண நாமம்.
தந்தைக்கு பின் மகன் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நீதியற்ற முறையில் தண்டிக்கப்பட்ட கணவன் மீது அனுதாபம் கொண்டு ஏன் மனைவியை ஆட்சிக்கு கொண்டுவர கூடாது. அப்பனுக்கு பின் மகன்கள் பிரதமர் ஆவதை எதிர்காத மலேசியர்கள், பிரதமராகும் வாய்ப்பை இழந்த தன் கணவருக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் இறங்கி அதனால் ஒரு மாநிலத் தலைத்துவத்தை ஏற்க வேண்டிய நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டால், அதை ஏன் எதிர்க்க வேண்டும்? கண்ணகி கதை எல்லாம் பொழுது போக்கா!
மற்றவர் பொருளை கலவாடுவதை கடுமையாக எச்சிரிக்கிறது வல்லுவம்.காலீட் பதவியை திருடியது பின் பாஸ்ஸின் இரு டூன்களை திருடியது,தீவினை அச்சத்தில் போறாமையே,திருட்டு போன்றவை தொடர்ந்து பல குற்றங்கள் செய்திட தூண்டும்.இப்படிப் பட்டவனையும் சிலர் ஆதறிக்கவே செய்கின்றதை கண்டு வியப்பும் வேதனையும் ஏற்படுகிறது.ஒட்டுப்போட்டு ஆட்சியை கொடுக்கும் நம்மை கண்டு அவன் கலங்கவேண்டும்,அறவலியில் சென்று நாட்டை வழிநடத்த நாம் தான் அவனுக்கு ஆலோசகராக திகழவேண்டும்,உரிமை அரியாது கூலிப்போல் கைகட்டி ஏவல் செய்யகூடாது.வாழ்க நாராயண நாமம்.
இருந்தவர்கள் எதை கிழித்தார்கள் ? எவனெவனோ புன்னாகுகள் பார்லிமெண்டில் தேவையிலாமல் பேசுகிறான்..ஒரு பெண் என்பதால் அவரை மறுப்பதா ? இஸ்லாம் ஒரு பெண் நாடாளவதை மறுக்கிறதா ? ஏன் இவ்வளவு யோசனை ?