எம்பி முட்டாள்தனமாக பேசுகிறார், கடிதத்தை வரைந்தது அவரது அலுவலகம்

 

PKR - Khalid rubbishசம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களால் மட்டுமே பின்பற்றப்படும் அரசியல் சம்பிரதாயம் பற்றிய விவாதம் சூடேறி வருகிறது. இது குறித்து கருத்துரைத்த டிஎபி சிலாங்கூர் மாநில தலைவர் டோனி புவா பதவி விலகவிருக்கும் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் முட்டாள்தனமாக பேசுகிறார் என்று சாடியுள்ளார்.

2008 மற்றும் 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் மந்திரி புசார் பதவிக்கு காலிட்டின் பெயரை மட்டுமே அரண்மனையிடம் சமர்ப்பித்தன என்பதை டோனி உறுதிப்படுத்தினார்.

“மந்திரி புசார் பதவிக்கு ஒரு பெயருக்கு மேல் அரண்மனைக்கு அனுப்பப்படவே இல்லை.

“உண்மையில், எங்கள் சார்பில் அவரை நியமித்து அரண்மனைக்கு அனுப்பிய கடிதத்தை வரைந்தது காலிட்டின் அலுவகம்தான்”, என்று டோனி மலேசியாகினிக்கு அனுப்பிய டெக்ஸ்ட் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

“நாங்கள் வரை நியமிக்க ஒப்புக் கொண்டோம். அதற்கான கடிதத்தின் படிவை அவரிடம் கேட்டிருந்தோம்”. என்றாரவர்.PKR - Khalid rubbish1

மற்ற இரு கட்சிகள் என்ன செய்தன என்பது பற்றி அவரால் எதுவும் கூற இயலவில்லை.

“மற்றவர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நாங்கள் அவரை மட்டுமே நியமித்ததால் படிவை ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்”, என்றார் டோனி.

டிஎபி கையொப்பமிடுவதற்காக எம்பியின் ஊடகச் செயலாளர் அர்பா’எஸா அப்துல் அசிஸ் மே9. 2013 தேதியிட்ட மாதிரி நியமனக் கடிதத்தை அனுப்பியதாகத் தெரிகிறது.

சம்பிரதாய அடிப்படையில் பிகேஆரும் டிஎபியும் பிகேஆர் தலைவர் வான் அஸிசாவின் பெயரை மட்டுமே தாக்கல் செய்யும் என்ற அவற்றின் விவாதத்தை இன்று பின்னேரத்தில் காலிட் நிராகரித்தார்.

இக்கூற்று தவறானது என்று கூறிய காலிட், கடந்த இரு பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் பக்கத்தான் கட்சிகள் தமது பெயரையும் சேர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை அரண்மனைக்கு அனுப்பின என்றார்.

பின்னர், பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வாரும் அவரது துணைவியார் வான் அஸிசாவும் இதனை மறுத்ததோடு காலிட்டின் பெயர் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது என்றனர்.