சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கான போராட்டத்தில் தோன்றியுள்ள ஒரு புதிய திருப்பம் சிக்கலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பாஸ் அதன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மூவரின் பெயரை தாக்கல் செய்துள்ளது.
பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் செப்டெம்பர் 3 க்குள் அவற்றின் மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளர்களின் பெயரை அரண்மனையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரண்மனை நிர்ணயித்திருந்த தேதிக்கு முன்னதாகவே பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பெயர்களை கடிதம் வழி அனுப்பி விட்டதாக த ஸ்டார் ஓன்லைன் செய்தி கூறுகிறது.
வட்டாரங்களை மேற்கோள் காட்டி அச்செய்தி சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கந்தர் அப்துல் சாமாட், சாலேஹின் முக்ஹி மற்றும் அஹமட் யுனுஸ் ஆகியோரின் பெயரை வெளியிட்டுள்ளது.
ஆனால், பெயரை வெளியிட விரும்பாத ஒரு மூத்த பாஸ் தலைவர் அந்த அறிக்கையை மறுத்தார்.
“இது (அரண்மனைக்கு கடிதம் அனுப்பியது) உண்மையல்ல. அது (கடிதக்) ரத்து செய்யப்பட்டு விட்டது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
இன்னொரு பாஸ் தலைவர் டாக்டர் டிஸுல்கிப்லி “இது எங்களுக்கும் செய்தியாகும்…உண்மை இல்லை என்று கருத வேண்டும்”, என்று டிவிட் செய்துள்ளார்.
இதனிடையே, பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு நெருக்கமான வட்டாரம் இது பற்றி ஏதும் தெரியாது என்றது.
“எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் பாஸ் மூன்று பெயர்களை அனுப்பியுள்ளது. அஸ்மின், அஸிசா மற்றும் இஸ்கந்தார் நியமிக்கப்பட்டனர்”, என்றாரவர்.
கடந்த சில வாரங்களில், இந்த விவகாரத்தில் பாஸ் எடுத்துள்ள முரண்பாடான நிலை பக்கத்தானில் அதன் இணைப்பை பாதித்துள்ளது.
இந்த கூற்று உண்மையென்றால், நம்பிக்கை துரோகியுடன் உறவு கொள்வது தானே மண்ணை வாரி தலையில் போட்டுக்கொள்வதுபோல/ கொல்வதுபோல .. விரோதியைக்கூட மன்னித்துவிடலாம். துரோகிகளை வேரோடு கலை பிடுங்க வேண்டும்.!!!
மக்கள் : PAS -ன் செயல்பாடுகள் முன்னுக்குப்பின் முரண்பாடாக உள்ளதே ???
நக்கல் : PAS -ல் தலைமைத்துவத்தில் உள்ள மூத்த தலைவர்கள் வயது முதிர்ந்த காரணத்தினால் (ஞாபக மறதியால்), முன்பு என்ன பேசினோம், இப்பொழுது என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறி கொண்டிருகிறார்கள்.
சீலாங்கூர் ….வாழ்துக்கள் ..
நான் முன்பே கூறியிருந்தேன்- கம்….ஸ்டுகளையும் மு..ம்கலையும் நம்பவே முடியாது.
எல்லா முஸ்லிம்களும் நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் அல்ல. உண்மையான இஸ்லாமிய கொள்கைப்படி நேர்மையான முஸ்லிம்களும் நிறைய பேர் உள்ளனர்… சுயநல நம்பிக்கை துரோகிகளைத்தான் கலை பிடுங்க வேண்டும்.
மனித குணத்திற்கும் ,செயல்களுக்கும் ,அவன் சார்திருக்கும் சமயத்திற்கும் சம்மந்தமில்லை .இதை புரிந்துக்கொள்ளாமல் கம்யுணிசத்தையும் ,இசுலாத்தையும் ஏன் வம்பிற்கு இழுக்கிறீர்கள் என் அன்பு தாய் தமிழ் அவர்களே!
எத்தனை முறை அடி பட்டாலும் புத்தி வர மாட்டுது இந்த ஹாஜி ஹடி அவங்கிக்கு.அம்நோவிடம் 1970 கலீல் பட்ட அடிக்கு பிறகு PAS கட்சி தலைவர்களுக்கு நல்ல புத்தி வந்தது.ஆனால் இந்த ஹடி மீண்டும் பழைய குருடி கதவை திறடி ன்னு பொய் விடுவார் போலிருக்கிறது.இப்படி பட்ட இன வெறியர்களால் தன நம் நாட்டு அரசியல் விமர்சனத்திக்கு ஆளாக நேரிடுகிறது.