பினாங்கு மாநில தன்னார்வ காவல்படையினருக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், டிஎபி தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இங் வெய் அய்க் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
இங் பிபிஎஸ்சின் துனைக் கமாண்டராவார்.
வாக்குமூலம் அளிக்க வந்த அவரை இன்று பிற்பகல் மணி 1.00 அளவில் ஜாலான் பட்டாணி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சங்கங்கள் சட்டம் 1966 ஐ மீறியதற்காக போலீசார் கைது செய்தனர்.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பிபிஎஸ் தலைவருமான பீ பூன் போ இன்று இரவு மணி 8.30 அதே போலீஸ் நிலையத்திற்கு வருகிறார்.
அயல்நாட்டு பெண்களை [அல்தாந்துயா] நம் நாட்டில் வெடிகுண்டு [C4] வைத்து தூள் தூளாக்குவது பெரிய விஷயமே இல்லை. ஆனால் தொண்டர் படை[தன்னார்வ குழு] வைத்து மக்களுக்கு உதவ நினைக்கும் பாதகச்செயல் புரியும் இப்பேற்பட்ட உறுப்பினர்களை சும்மா விடக்கூடாது. 302ல் தண்டனைக் கொடுக்க வேண்டும். மலேசிய போலீசா……கொக்கா?