தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்ப்பு பேரணி நடத்தினர்.
எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், அவர்களில் 5 டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர், தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
யும் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஃபஹாமி இஸ்மாயில் வழி நடத்த எதிர்ப்பாளர்கள் சட்டத்துறை பிரிவு வளாகத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தனர்.
இதைப் போன்ற எதிர்ப்பை பினாங்கு யூனிவர்சிட்டி சயின்ஸ் மலேசியா மாணவர்களில் ஒரு பகுதியினரும் மேற்கொண்டனர்.
பிரதமருக்கு அரசாங்கத்தின் தவறுகளை கடிந்து அறிவுரை கூறவேண்டிய அமைச்சர்களும், அரச உயர் அதிகாரிகளும் தங்களது பிழைப்பு கருதி அதற்கு தயாராக இல்லாததால்தான், சமூக ஆர்வர்லர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியிடும் கருத்துக்கள் யாவும் ஆளும் அரசாங்கதிற்கு “தேசநிந்தனை” கருத்துக்களாக தெரிகிறது என்பதுதான் உண்மை.
DAP இனவாதி ஏன் அங்கு சென்றான் ..இருக்கும் மாணவர்களையும் கெடுப்பதர்கா..ஏன் அரசியல் கட்சி உள்ளே நுழைந்தது..
பல்கலை கழக மாணவர்களே! உங்கள் துணிச்சாலை பாராட்டுகிறோம் .
இது என்ன ஞாயம் shanti அவர்களே ? இப்பொழுது நீங்கள், இந்த விவகாரம் குறித்து பிரதமைரை, AG ஏன் கடிந்து கொள்ளவில்லை ? மாறாக , மாணவர்களுக்கு , தெரு ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து சொல்கிறீர்கள் ? நீங்கள் தான் தெரு ஆர்பாட்டம் செய்ப வர்களுக்கு எதிராக தேச நிந்தனை சட்டத்தை பயன்படுத்த ஆதரவு தெரிவித்தீர்கள்! இப்பொழுது என்ன ஆயிட்சி ? ஒ DAP என்றால் விரோதி , பாரிசான் என்றால் நண்பன் …. பச்சோந்தி யின் கலர் தெரிகிறது …. சாந்தி சாயம் வெளுதிரிச்ச்சி டும் டும் டும் … பரிசான் ஜால்ரா தெரிஞ்சிரிசி டும் டும் டும் ….சாந்தி சாயம் என்ன ஆயிட்சி ? யாராவது சொல்லுங்கள் !!!
UMNO -காரன் S …………………. .…N பின்புலத்தை சுத்தம் செய்வதற்கு
MCA -காரன் ” TISSUE PAPER ‘-ருடனும், MIC -காரன் தண்ணீருடனும் வரிசை பிடித்து UMNO -காரன் பின்னால் கோழைபோல் நிற்பதைவிட,
இனம், மொழி பாராமல் மாணவர்களின் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, DAP -காரன் இனவாதியுமல்ல, கோழையுமல்ல நாங்கள் மாவீரர்கள் என்று நிருபித்து விட்டனர்.
தன் இனத்தையே கீழ்தரமாக பேசி அவமானம் செய்யும் இனம் …… தமிழன் ……
அப்படியானால் மகாத்மா காந்தியும், துங்கு அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் செய்ததும் தவறுதான் . (ஆட்சியில் இருப்பவரை எதிக்காமால் பாவாடைக்குள் புகுந்துக்கொள் என்று சில BN ஆதறுவாளர்கள் கருத்துரைப்பார்கள் ) இது சுயநலவாதிகளுக்கும் பொருந்தும் .
சாந்தி, எங்கே உள்ளீர்கள் ? வாருங்கள் …. என் நீங்கள் பிரதமரையும் , சட்ட துறை தலைவரையையும் கேள்வி கேட்ட வில்லை ? பயமா ? எங்கே உங்கள் மீதும் தேச நிந்தனை சட்டம் பாயும் என்று ? உண்மைக்கு துணை நில்லுங்கள் ! பொய்மை காலத்தால் தூக்கி எரிய படும் ! உண்மைக்கு வாருங்கள் ! அடுத்த தலைமுறைக்கு உண்மையை விட்டு செல்வோம் !
“பிரதமைரை, AG ஏன் கடிந்து கொள்ளவில்லை” அவர்கள் செய்தது சரி என்று நான் குரிப்பிடவில்ல்யே..தப்பை தட்டி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு அனால் அது அநாவசியமானதாக இருக்க வேண்டாம் என்றுதான் கூரினென் .
ninja wrote on 11 September, 2014, 23:33
<<<<>>>>
மகாத்மா காந்தி பல இன்னல்களையும் சந்தித்தவர். ஆங்கிலயரை எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர். இந்தியாவின் முதல் பிரதமராக வர வாய்ப்பு இருந்தும் அப்பதவியை புறகணித்தது மட்டுமல்ல, சுதந்திரத்துக்காக அமைக்கபட்ட காங்கிரஸ் அமைப்பை, சுதந்திரத்துக்குபின் அந்த அமைப்பு கலைக்க பட வேண்டும், இல்லையென்றால் அரசியலுக்காக காங்கிரஸ் பெயர் தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும் கூறியவர். அவர் கூறிய யோசனையை ஏற்றுக்கொள்ளாத சில சுயநலவாதிகளின் செயலால்
காங்கிரஸ் அரசியல் கட்சியாக மாறி இந்தியாவை ஆட்சி செய்து, இன்று படு பாதாளத்தில் இருக்கிறது.
ஆனால், துங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக் மற்றும் ஹுசேன் ஒன் போன்றோர் ஆங்கிலயரின் சேவகர்கள் (அதாவது ஆங்கிலயரிடம் சம்பளத்துக்கு வேலை செய்தவர்கள்). சுதந்திரம் பெற்றபின் மலேசியாவின் முதல் பிரதமரான துங்குவை அடுத்து வந்த பிரதமர்களின் வழிதோன்றல்களே இன்றுவரை நம் நாட்டின் பிரதமர்களாக இருகின்றனர். தற்பொழுதுபிரதமராக இருக்கும் நஜிப் (அப்துல் ரசாக் மகன்) தனக்கு அடுத்து தனது உறவினரான ஹிஷமுடினை ( ஹுசேன் ஒன் மகன்) பிரதமராக்க முனையும் வேலையில், முன்னாள் பிரதமர் மாமா மகாதீர் இஸ்கந்தர் குட்டியோ நஜிப்புக்கு அடுத்து தன் மகனை முக்ரீஸ் மகாதீர் குட்டியை எப்படியாவது பிரதமராக்கி விட வேண்டும் என்னனமோ உல்டா செய்து கொண்டிருக்கிறார்.
ஆகவே மகாத்மா காந்தியுடன்(சுதந்திரத்துக்காக போராடியவர்), துங்கு அப்துல் ரஹ்மானை ( ஆங்கிலயர் அலுவலகத்தில் ஒய்யாரமாக உட்கார்ந்து வேலை பாத்தவர்) ஒப்பிடாதீர்கள்.
சாந்தி, திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் : தேவை இல்லாத நேரத்தில், செய்ய கூடாதவைகலை செய்வது தவறு, அதே வேலையில், செய்ய வேண்டிய நேராத்தில், செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் இருப்பதும் தவறு என்கிறார் ! உங்களுக்கு புரியவே இந்த திருக்குறளை எழுதி இருக்கிறார் போலும் !
ஸ்ரீ ;என் கேள்வி, மக்களை ஒன்று படுத்தி நியாயத்திற்கு போராடுவது குற்றமா ?நாட்டு சுதந்திரத்திற்காக மக்களை ஒன்றுக் கூட்டியவரும் ,குற்றவாளித்தானே ?BN சட்டத்தின் கீழ் ,இதற்கெல்லாம் தொடர்சியாக தண்டனையை கொடுத்து மகிழ்சியடைகின்றனர் , ….ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை ,என்பதை பாட்டிலும் நீங்கள் கேட்டிருப்பிர்கள் ,கேள்விகள் கேட்பதும் குற்றமா ? துங்கு , கூஜா தூக்கியவர்தான் , பிரிட்டிஸ் காரனால் நியமிக்கப்பட்டவர் தான் ,ஆனால் கூட்டத்தை கூட்டிய குற்றவாளிதானே ?
ninja, “கூட்டத்தை கூட்டுபவர்கள் குற்றவாளிகளே ” என்று UMNO-வின் அகராதியில் மாற்றம் செய்தது மாமா மகாதீர் குட்டி. அவருடைய அருவருடிகள் மாமா மகாதீர் குட்டி உட்பட (அப்துல்லா படாவி தவிர்த்து) தங்களது தேவைகேற்ப இதை பயன்படுத்தி வருகின்றனர்.
சுதந்திரத்துகாக போராடினோம் என்று வாய்கிழிய பேசும் தலைவர்கள், அதாவது சுதந்திரத்துகாக கம்யுனிஸ்களை எதிர்த்து போராடினோம் என்றுதான் கூறுவார்கள். கம்யுனிஸ்களா மலேயாவை ஆட்சி புரிந்தார்கள்? அவர்களை எதிர்த்து போராடியா இவர்கள் சுதந்திரம் பெற்றார்கள்? சுதந்திரம் என்றால் என்ன, சகோதரயுத்தம் (உள்நாடுபோர்) என்றால் என்னவென்று தெரியாமல் 57 வருஷமாக சுதந்திரத்துகாக போராடினோம் என்று புலம்பி கொண்டிருக்கும் அரைகுறை அறிவாளிகளது இயலாமையே இந்த “கூட்டத்தை கூட்டுபவர்கள் குற்றவாளிகள்” என்பது மட்டுமல்ல அவர்கள் கூற்றுபடி கம்யுனிஸ்களை எதிர்த்து போராடியவர்களும் குற்றவாளிகளே.