நிக் அஸிஸ் “பயத்தில் நடுங்கினார்”

PAS Nik Azizசிலாங்கூர் சுல்தான் பிகேஆர் மற்றும் டிஎபி ஆகியவற்றின் ஆணவத்தையும் பணிய மறுத்தலையும் கண்டித்துள்ளது பற்றி நாளிதழிகளில் படித்த போது பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் “பயத்தில் நடுங்கினார்” என்று கூறப்படுகிறது.

உத்துசான் மலேசியாவின் கூற்றுப்படி, அம்மதிப்பிற்குரிய தலைவர் அச்செய்திகளைப் படிக்க சிரமப்பட்டார். மேலும், சுல்தானின் எதிர்வினையை ஒரு கடும் எச்சரிக்கை என்று அவர் வர்ணித்தார்.

“நாளிதழின் முதல் பக்கத்தைப் படித்தேன். அச்சொல் “துரோகம்” (டெர்ஹாகா) நான் பயத்தில் நடுங்கினேன். அதற்குமேல் கீழேயுள்ளதை நான் படிக்கவில்லை. ஏனென்றால், அது சுல்தானின் கோபம் மட்டுமே, அது அல்லாவின் கோபமாக இருந்திருந்தால்:, என்று அவர் கூறினார்.

டிஎபி மன்னிப்பு கோரியுள்ளது. அவர் (லிம் குவான் எங்) புரிந்து கொண்டுள்ளார் என்று நிக் அசிஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சுல்தானிடம் மன்னிப்பு கோரிய பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் மாநில அரசமைப்புச் சட்டத்தை பின்பற்றியதாக அவர் விளக்கம் அளித்தார்.