கேடிஎம்பி எட்டு தொழிற்சங்கவாதிகளை வேலையிலிருந்து நீக்கியது

 

KTMB1கெரித்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (கேடிஎம்பி) தொடர்ந்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று மேலும் எட்டு தொழிற்சங்க உறுப்பினர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

“இன்னும் 15 க்கு மேற்பட்டோர் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றுKTMB2 ரயில்வேமென்ஸ் யூனியன் ஆப் மலாயா (ஆர்யுஎம்) தலைவர் அப்துல் ரசாக் முகமட் ஹசான் தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.

“110 கேடிஎம்பி தொழிலாளர்களுக்கு காரணம் கோரும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த மே மாதம் மறியலில் பங்கேற்றிருந்தவர்கள் என்று கேடிஎம்பி அவர்களை அடையாளம் கண்டுள்ளது.

கேடிஎம்பியின் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மனித உரிமைகளுக்கான அரசு சார்பற்ற அமைப்பான ஜெரிட் கண்டித்துள்ளது.

ஆர்யுஎம்மின் தலைவர் அப்துல் ரசாக் மற்றும் துனைத் தலைவர் ஆர். சுப்ரமணியம் ஆகியோர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.