அமைச்சர் இட்ரீஸ்: அஸ்மிக்கு எதிரான தேசநிந்தனைக் குற்றச்சாட்டு தவறு

 

Idris-Azmiபிரதமர் நஜிப்பின் அமைச்சரவையின் உறுப்பினரான அமைச்சர் இட்ரீஸ் ஜாலா தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் மலாயா பல்கலைக்கழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை பகிரங்கமாக குறைகூறினார்.

“அஸ்மி ஷரோம் மீது தேசநிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கக்கூடாது. அறிவு வளர அறிவுக் கழக சுதந்திரம் அவசியமாகிறது”, என்று ஒரு தொடர் டிவிட்டர் இடுகையில் அவர் கூறினார்.

எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத அமைச்சரான இட்ரீஸ் மலேசியா தொடர்ந்துIdris-Azmi1 மிதவாத போக்கை பின்பற்ற வேண்டும் என்றார்.

“நமது சமுதாயத்தின் சமூக அமைப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தாத வரையில் ஆக்ககரமான குறை நிறை கூறல் மற்றும் மாற்றுக் கருத்து அனுமதிக்கப்பட வேண்டும்”, என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கத்தை குறை கூறிய முதலாவது அமைச்சராகிறார் இட்ரீஸ்.

இன்று வரையில், குறைந்தபட்சம் 10 முக்கியமான நபர்கள் தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டுள்ளனர் அல்லது குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் அல்லது குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

Idris-Azmi2