இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்காரையும் போலீஸ் படையையும் அவமதித்தற்காக பார்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) உறுப்பினர் விக்டர் வோங் குற்றவியல் சட்டம் செக்சன் 504 இன் கீழும் மற்றும் தொடர்புதுறை பல்லூடக சட்டம் 1996 செக்சன் 233(1)(a) இன் கீழும் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.
விக்டர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் ரிம4,000 பிணைப் பணம் செலுத்தினார். அவருக்கு எதிரான வழக்கு அக்டோபர் 27 இல் தொடங்கும்.
ஒரு தொழிற்சாலை நிருவாகியான விக்டர் வோங் The Ant Daily க்கு எழுதுகிறவர்.
இன்று அவரது ஆதரவாளர்கள் 10 பேர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர், அவர்களுடன் கட்சியின் தலைவர் ரோகானா அரிப்பினும் இருந்தார்.
‘பாரிசானின் நாய்’ இந்த IGP ,என்றதற்காக அந்த எதிர்க்கட்சிக்காரர் மீது நடவடிக்கையா? நன்றிய… ஒப்பிட்டது கூட சரியில்லை. காதுகளில் விழுந்தால், மனிதர்களோடு ஒப்பிட்ட வரை குதறி எடுத்துவிடும்.
இதுதான் பேச்சு சுதந்திரமோ ?