சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி புசாராக பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை அவர் சிலாங்கூர் அரண்மனையிலிருந்து பெற்றுக் கொண்டார்.
இன்று மாலை அக்கடிதம் பெறப்பட்டது. சிலாங்கூர் மாநில புக்கிட் அந்தாரா சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின் அலி நாளை காலையில் பதவிப் பிரமாணம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாகினி தொடர்பு கொண்ட போது இதனை சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பாணி ஒப்புக் கொண்டார்.
அஸ்மின் தற்போது பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் கட்சி தலைவர் டாக்டர் வான் அஸிசா ஆகியோருடன் ஒரு கூட்டத்தில் இருக்கிறார்.
பிகேஆர் தலைமையகத்தில் ஊடகக் குழுவினர் குவிந்துள்ளனர். அங்கு ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்வாரும் அஸிசாவும் அஸ்மின் அலியின் நியமனத்தை ஏற்றுக் கொண்டு இந்த இழுபறியை ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்களா என்ற கேள்வி இருக்கிறது.
மேலும், இந்த அரசியல் தலைவர்கள் தங்களின் பதவிப் போராட்டங்களில் இனிமேலும் அவர்களுக்கு வாக்களித்த மக்களை முட்டாள்களாக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைளை மக்கள் முன்னெடுக்க வேண்டும்.
அஸ்மின், அன்வார் மற்றும் அஸிசா ஆகியோருக்களுக்கிடையிலான கூட்டம் மாலை மணி 7.30 க்கு முடிவுற்றது. பின்னர், அன்வாரும் அஸிசாவும் அங்கிருந்து கிளம்பினர். அக்கூட்டம் பற்றி அன்வாரும் அஸ்மினும் மௌனம் காத்தனர். ஆனால், விளைவு “ஆக்கரமானது” என்று மட்டும் கூறிக்கொண்டு அன்வார் வெளியேறினார்.
அஸ்மின் இரவு மணி 8.00 க்கு ஒரு முழு அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PKR கட்சியை பிளவு படுத்த BN செய்யும் சதியாக இருக்குமோ என்றுதான் எண்ண தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும் அனைவரும் பொறுமையாக இருந்து அரண்மனை ஆலோசனையின் நடப்பது நல்லது.
சனீஸ்வரனும், வித்தியாகாரனும் கைகோர்த்து ராஜயோகத்தை அஸ்மினுக்கு கொடுத்தாலும் அதனை மங்களகரமானவர் நிலைக்க விட மாட்டார். சிலாங்கூரில் அடுத்த மாநில தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்பொழுதே தயாராகலாம்.
எங்கு பார்த்தாலும் துரோகிகளும் கூஜா தூக்கிகளும் மன சாட்சி இல்லா நியாயத்திற்கும் நீதிக்கும் அப்பாற்பட்ட ஜென்மங்கள்
அஸமின் எம்.பி.யாக ஆவதும், அதை நீதிக்கட்சி அங்கீகரிப்பதும் ஒன்றும் அதிசயமும் இல்லை ;குடி ஒன்றும் முழுகிடாது.( ஜனநாயகத்தின் மானம் போகும் என்பது வேறு விடயம்.) மிக மிக சாதாரனமான விஷயம்.
அன்வர் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு பிரதமராக வந்திருந்தால்கூட கிடைக்காத ஒரு சரித்திரப் புகழுக்கான கதவு , இப்போது அருக்காக இறையருள் திறக்க வழி செய்திருக்கிறது. ஒப்புக்கொண்டால் அன்வர் ஒரு சராசரி அரசியல்வாதி. மறுத்துப் போராடி ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் பணியில் இறங்கினால் மலேசிய சரித்திரத்தில் என்றென்றும் சாகா புகழுடன் விளங்குவார் அன்வார். எது வேண்டும்? அற்ப அரசியல் வாழ்வா? மலேசிய அரசியல் ஜனநாயகத்தின் மார்பை அலங்கரிக்கப் போகும் சரித்திரப் புகழா? முடிவு அன்வாரின் கைகளில் !
செலங்கோர் மந்திரி பேசர் பதவி மீண்டும் பகடனுக்கு கிடைபடற்கு காரணம் அந்த 2 பாஸ் உருப்பினர்கல்டன் . நியாப்படி அவர்களுக்கு எக்ஸ்கோ தரப்பட வேண்டும். அனால் பாஸ் கட்சிக்கு வேண்டாதவர்கள் ஆகி விட்டார்களே என்ன செய்வது.
ஏன் அஸ்மின் அலி அன்றே வேண்டாம் என்ற mb பதவியை மல்லு கட்டி கொடுக்கிறார்கள் ?
அன்வாருக்கு சோதனை மிகுந்த காலம் இது. பொறுமையை கையாளுங்கள். அரசியல் தீர்க்க தரிசிகளுடன் கலந்தாலோசிக்கும் தருணம் இது. அவசரப்பட்டு [செடேம்பர் 16 ஐ போன்று] எதனையும் சொல்லிவிடாதீர்கள். ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பானாக.
இது ஒரு சதி திட்ட வேலை போல் தெரிகிறது .
உ.ப தமிழர் தலைவருக்கு பெ பீ பூ ……..TSK பற்றி பேச மாட்டார்….
Azmin வேண்டாம் என்ற பதவியை, ஆசைவார்த்தைகளை பேசி , வலுக்கட்டாயமாக தருவதற்கு காரணம், PKR தலைவரை அசிங்க படுத்தவே ! எது நடந்தாலும் எதிர் கட்சியையே குறை கூருவர் BN அபிமானி ! ஆனால் அன்வார் நல்லவர், AZMIN க்கு வாய்ப்பு வழங்கி, சுல்தானின் யோசனையை எற்று கொண்டார், மக்கள் நலன் காக்க, அடுத்த அரசியல் நகர்வுக்கு வழி விட்டு. AZMIN இன்னொரு முன்னால் MB யாக ஆகாமல் இருந்தால் நல்லது . ஆனால் ஆசை யாரை விட்டது !