பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூரின் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்பட்டதற்கான காரணங்களை இன்று அரண்மனை விளக்கியது. எம்பி வேட்பாளர் நியமனத்தில் பக்கத்தான் ரக்யாட் ஒரு வேட்பாளர் மீது உடன்பாடு காண முடியாமல் போனதே ஆட்சியாளர் அஸ்மின் அலியை தேர்வு செய்ய வேண்டியதாயிற்று என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அஸ்மின் அலி அவரது கட்சியின் துணைத் தலைவர் என்பதோடு புதிய எம்பி பிகேஆரிலிருந்து வர வேண்டும் என்பதால் இறுதியில் அவர் தேர்வு செய்யப்பட்டார் என்று சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முனிர் பாணி இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
மாநில நிருவாக விவகாரங்களில் ஆட்சியாளர் தலையிடுகிறார் என்பதையும் அரண்மனை மறுத்தது.
ஒரு எம்பி நியமிக்கப்படுவதில் சுல்தான் அவருடைய “உசிதப்படி செய்யும் உரிமை”யை மட்டுமே பயன்படுத்தினார் என்று முனிர் பாணி கூறினார்.
அதைத்தான் நாங்கள் அப்பவே சொல்லிவிட்டோமே! அம்னோவைத் தவிர வேறு யார் தலையிடப் போகிறார்!
அவர் உசிதப்படி செய்யும் உரிமையும் ஒரு வழக்க வரம்புக்கு உட்பட்டது என்பதனையும் எடுத்துச் சொல்லுங்கப்பா. இனிமேல், சத்திய பிரமாணம் செய்து கொடுத்தாலும் பிரயோசனம் இல்லை.
மன்னராட்சி, முடியாட்சி ஜனநாயகம், மாநில அரசமைப்பு இதற்கெல்லாம் சரியான விளக்கத்தினை சுல்தானுக்கு தெளிவு படுத்தியிருக்க வேண்டும். இலையேல், நாட்டில் சட்டமென்பது வெறும் கண்ணாம்மூச்சி கேலி விளையாட்டாக மாறி, கோல் எடுத்தவனெல்லாம் மாண்டோர் ஆகி விடுவார்கள். குறிப்பாக, அரசமைப்புப்படி எந்த ஆதாரத்தைக்கொண்டு அஸ்மினுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்று அரண்மனை முடிவு செய்தது? அரண்மனை அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பது இங்கு கேள்விக்குறியாகிவிட்டது. பேராக் விவகாரத்தில் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு இங்கு மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. மாமியாருக்கொரு சட்டம் மருமகளுக்கு ஒரு சட்டமா??? அரசமைப்பு சட்டத்தின்படி அஸ்மினை பெரும்பான்மையுடன் தேர்வு செய்திருந்தால் மக்கள் இந்த தேர்வுக்கு தலை வணங்கி இருப்பர்.
ஜனநாயகம் மலேசிய அரசியலில் செயல் பட வில்லை என்பதை
பதிவு செய்த தினம் !!!
அமாம் ஒருவர் பார்வை ….தெரியதகும் நமக்கு போடா போக்க்தவேனே …மன்னர் சரியாகத்தான் அவர் கடமை அவர் சிறப்பு உரிமை பயன் படுத்தினர்……..வாழ்க மன்னர் ஆட்சி
தலையிடவே இல்லையாம் !… ,யாருக்கு காத்து …
ஆமாம் ஆமாம் சுல்தான் தலையிடவே இல்லை….
முகரை கட்டையை பார்த்தாலே தெரிகிறதே.
பராசக்தி திரைப்படத்தில் ஒரு வசனம் ” அறிவு கெட்டவனே எந்த காலதிலடா அம்பாள் பேசினாள்? ” ( எந்த காலத்தில் சுல்தான் அரசியலில் தலையிட்டார்.) நினைத்துப்பாருங்க.
சுண்ணாம்புக்கு சுண்ணாம்பு பூசப்பட வேண்டும் !