அம்னோ போல் பாஸ் பக்கத்தானுக்கு தலைமை ஏற்க வேண்டும், இப்ராகிம் அலி

Pas to Pakatan-ibrahim aliஇரு-கட்சி முறையின் கீழ் பாரிசானுடன் போட்டியிட வேண்டுமென்றால், பாஸ் கட்சி பக்கத்தானுக்கு தலைமை ஏற்க வேண்டும் enRu பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி இன்று கூறினார்.

ஏன்? அம்னோவைப் போல் பாஸ் மலாய்க்காரர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி. அம்னோ பாரிசானை வழிநடத்துகிறது.

மலேசிய இன அடிப்படையிலான மக்கள் தொகையை பிரதிபலிக்க அம்னோ இச்சூத்திரத்தை பயன்படுத்துகிறது.

“பக்கத்தான் தலைமைத்துவத்தை பாஸ் ஏற்றுக் கொண்டால், மசீசவை போல் டிஎபி அதன் தலைக்கணத்தை சற்று குறைத்துக் கொண்டால், (புதிய மலேசிய அரசியல் தோற்றத்திற்கு) அது ஒரு தொடக்கநிலை வாய்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

“இரு-கட்சி முறையை உருவாக்குவதில் அவர்கள் வெற்றி பெறாவிட்டாலும், கிட்டத்தட்ட அதற்கு அருகில் வந்து விடுவார்கள்.

“அதன் பின்னர்தான் பிஎன்னும் பக்கத்தானும் நல்லாளுகை அடிப்படையில் போட்டியிட இயலும்”, என்று இப்ராகிம் அலி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பக்கத்தானின் உட்பூசல் பற்றி குறிப்பிடுகையில் அவர் இதனைக் கூறினார்.