சிலாங்கூர் மாநில மந்திரி புசார் நெருக்கடியின் உச்சகட்டத்தில் தெரிவித்த கருத்துக்காக அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி தேச நிந்தனைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படும் இரண்டாவது அறிவுக்கழகத்தினராகிறார்.
மலேசியன் இன்சைடர் இணையதளத்தில் அசிஸ் பாரி தெரிவித்திருந்த கருத்துகளுக்காக நாளை காலை மணி 11.00 க்கு சபாக் பெர்ணம் போலீஸ் நிலையத்தில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அச்செய்தி தளம் இன்று கூறியது.
அசிஸ் பாரியை சுதந்திரத்திற்கான வழக்குரைஞர்கள் (எல்எப்எல்) அமைப்பின் வழக்குரைஞர் அபிக் எம் நூர் பிரதிநிதிப்பார்.
இதற்கு முன்னதாக, மலாயா பல்கலைக்கழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷாரோம் மலாய் மெயில் ஓன்லைனில் தெரிவித்திருந்த கருத்துக்காக விசாரிக்கப்பட்டு பின்னர் தேச நிந்தனை குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மலேசியன் இன்சைடரில் வெளியிடப்பட்டுள்ள இரு கட்டுரைகளுக்காக அசிஸ் பாரி விசாரிக்கப்பட விருக்கிறார் என்று அந்த இணையதளம் கூறிற்று.
அசிஸ் பாரி தெரிவித்திருந்த கருத்துகளுக்கு எதிராக 100 க்கும் கூடுதலான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆமாம் இவனுங்க ரொம்ப யோக்கிமாம் மாதிரி ,ஆசி பரியை விசாரிக்கிரானுங்கலாம்
பேராசிரியர் அசிஸ் பாரி தேசிய நிந்தனை சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட வேண்டும். அதனால் இந்த சட்டத்திற்கு மிகவும் குறுகிய மனப்பான்மையில் இதுநாள் வரை உரை கூறி வரும் நீதித்துறை, கால மாற்றத்திற்கு ஏற்றவாறு தேச நிந்தனை என்பதற்கு ஓர் விரிவான சட்ட விளக்கத்தினை கொடுத்து “தேச நிந்தனை” என்பதனை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு பயன்படும் ஒரு கருவியாக பயன்படுத்தாமல் அரசுக்கு அரண் போட வேண்டும். இதனைச் சட்ட வழியில் எதிர்கொள்ள பேராசிரியர் அவர்களுக்கு தகுந்த திறம் உள்ளது. இன்று இவர் வெல்லவில்லையேல் என்றும் அவர் இனம் இந்நாட்டில் அறிவளவில் முன்னேறவே முடியாது. அதைத்தான் ஆளும் கட்சி எதிர்பார்க்கின்றது. ஆனால் நீதித்துறை அதற்கு ஊன்று கோலாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த நாட்டில் பல இனத்தவர்கள் மீதும் தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படலாம்.ஆனால் தண்டிக்கப் படுவது ஒரு இனம்ந்தான்.அதுதான் தமிழினம்.உதாரணத்துக்கு நமது உதய குமார் அவர்கள்.இனவாதம் தலைவிர்த்து ஆடுகி