தேச நிந்தனை சட்டத்திற்கு விடப்பட்டுள்ள சவால் உயர்நீதிமன்றத்திற்கு செல்கிறது

 

Azmi-challenge to Hcourtமலாயா பல்கலைகழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புவதென்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இது சம்பந்தமாக அஸ்மியின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ தாக்கல் செய்திருந்த மனுவை செசன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்குச் செல்கிறது.

இம்முடிவை எடுத்த செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸானோல் ரஷிட் ஹுசெய்ன் இதில் முடிவு Azmi-challenge to Hcourt1செய்ய வேண்டிய அரசமைப்புச் சட்ட பிரச்சனை இருக்கிறது என்று கூறினார்.

அரசமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உயர்நீதிமன்றங்கள்தான் – உயர்நீதிமன்றமும் அதற்கும் உயர்வான நீதிமன்றங்களும் – முடிவு செய்ய வேண்டும்.

கடந்த மாதங்களில் அஸ்மினும் இன்னும் பலரும் தேச நிந்தனைச் சட்டம் 1948 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.