ஹாங்காங் தீவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்களாட்சி-ஆதரவு ஆர்ப்பாட்டங்களை விட்டு ஒதுங்கி இருக்குமாறு வெளியுறவு அமைச்சு மலேசியர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
இதுவரை இவ்வார்ப்பாட்டங்களில் மலேசியர் எவரும் காயமடைந்ததாகவோ கைதானதாகவோ தகவல் இல்லை.
“ஹாங்காங்கில் உள்ள மலேசியர்கள் அதிக விழிப்புடன் இருந்து தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களிலிருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும்” என அமைச்சு ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஹாங்கில் இருக்கும் மலேசியர் அல்லது அங்கு பயணம் மேற்கொள்வோர் தங்களின் இருப்பிடம் குறித்து மலேசிய தூதரகப் பேராளர் அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.
பினாங் தொகொங் திரு லிம் நீங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு போகலையா? கடந்த நாட்களில் அங்கு சென்று மலேசியாவை தரக்குறைவாக விமர்சித்திர்கள்.