நிக் நஸ்மி: சீனப்பள்ளிகள்தாம் பல்லினங்களும் பயிலும் பள்ளிகளாக விளங்குகின்றன

unityதாய்மொழிப்  பள்ளிகள்  இனங்களைப்  பிரித்துவைப்பதாகக்  கூறும்  அம்னோ  தலைவர்களின்  வாதங்களை உடைத்தெறியும்  வகையில்  சீனப்  பள்ளிகள்தாம்  “பல்லினப் பள்ளிகளாக”க்  காட்சி  தருகின்றன  என்கிறார்  பிகேஆர்  இளைஞர்  தலைவர் நிக் நஸ்மி..

மலாய்காரப்  பிள்ளைகள்  உள்பட  பல்லின  பிள்ளைகளும்  அங்கு  பயில்வதைக்  காண  முடிகிறது  என  நிக்  நஸ்மி கூறினார்.

பல்வகை  கல்விமுறைகள்  தேசிய  ஒற்றுமைக்கு  சவாலாக  அமைவதை  ஒப்புக்கொண்டாலும்,  “சமுதாய  ஒப்பந்தம்” தாய்மொழிப்  பள்ளிகளுக்கு  உத்தரவாதம்  அளிப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார். எனவே, சம்பந்தப்பட்ட  எல்லா  இனங்களின் இணக்கமின்றி  அதை  மாற்றவியலாது.

தாய்மொழிப்  பள்ளிகளை  ஒழிக்க  வேண்டும்,  முடக்கிப்போட வேண்டும்  என்று  கூறி  நேரத்தை  வீணாக்கி,  இனப்பதற்றத்தை  அதிகரிப்பதை  விடுத்து  தேசிய  வகைப் பள்ளிகளே மலேசிய  பெற்றோரின்  முதன்மை  தேர்வாக  அமைய  அவற்றின்  தரத்தை  உயர்த்த  முயற்சிகளை  முன்னெடுக்க  வேண்டும்  என்றாரவர்.