ஐஜிபி : போலீசிடம் இரட்டை நியாயம் இல்லை; ஜாஹிட்டையும் விசாரிப்போம்

igpதேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  மேற்கொள்ளப்படும்  விசாரணைகளில்  போலீசார்  இரட்டை  நியாயம்  கடைப்பிடிப்பதாகக் கூறப்படுவதை போலீஸ்  படைத்  தலைவர்(ஐஜிபி)  காலிட்  அபு  பக்கார்  நிராகரித்தார்.

போலீஸ், உள்துறை  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி-இடமும்  விசாரணை  நடத்தி  வாக்குமூலம்  பதிவு  செய்யும்.

“குற்றம்  நிகழ்ந்திருந்தால்  விசாரணை தொடக்கப்படும்.

“யாரிடம் வாக்குமூலம்  பதிவு  செய்ய  வேண்டுமோ  அவர்களை  அழைத்து  வாக்குமூலம்  பதிவு  செய்வோம்.

“அமைச்சராக  இருந்தாலும்  சரி, நானாக இருந்தாலும்  சரி”, என்றாரவர்.

பெங்காலான்  குபோர்  இடைத் தேர்தலின்போது  ஜாஹிட்  தெரிவித்த  கருத்துகளுக்காக  அவர்மீது  டிஏபி  போலீசில் புகார்  செய்திருந்தது.

2009-இல், பேராக்  அரசமைப்பு  நெருக்கடியின்போது  நிகழ்ந்த  ஒரு  ஆர்ப்பாட்டத்தில்  டிஏபி  கட்சியினர்  பேராக்  ராஜா   மூடா  காரின்மீது  கற்களை  வீசி  எறிந்ததாக  அமைச்சர்   கூறினாராம். அது ஆதாரமற்ற  குற்றச்சாட்டு  என  டிஏபி கூறியது.

டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்கும், தேச  நிந்தனை  வழக்குகளில்  24-மணி  நேரத்தில்  விசாரணை  தொடங்கும்  என்று  ஜாஜிட்  உறுதி  கூறியிருப்பதைச்  சுட்டிக் காட்டி  அமைச்சருக்கு  எதிராக  எப்போது  விசாரணை  என்று  அடிக்கடி  கேட்டுக்கொண்டிருந்தார்.