பிரதமர் தலையிட்டு ஆகாயப் படைத் தளத்தைக் காக்க வேண்டும்

rmafபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், தெலோக் ஆயர்  தாவாரில்  உள்ள  அரச  ஆகாயப் படைத்  தளத்தில்   தனியார்  மேம்பாட்டுப்  பணியைத் தடுத்து  நிறுத்தி  அத்தளத்தைப்  பாதுகாக்க  வேண்டும்   என அம்னோ  தாசெக்  குளுகோர்   இளைஞர்  பகுதித்  தலைவர்   முகம்மட்  நஷ்ரோல்  ஹிஷாம்  அப்துல்லா   கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அத்தளத்தை  மேம்பாட்டு  நிறுவனம்  ஒன்றிடம்  ஒப்படைக்க  அரச  மலேசிய  ஆகாயப் படை  ஏற்பாடு  செய்து  கொண்டிருப்பதை  அடுத்து அவர்  இவ்வாறு  கேட்டுக்கொண்டார்.

அங்கு  மேம்பாட்டுப்  பணிகள்  மேற்கொள்ளப்படுவதைக்  கட்சித்  தலைவர்கள்  அனுமதித்தாலும்  அப்பகுதியில்  உள்ள 11  அம்னோ  தொகுதிகளும்  எதிர்க்கும்  என்றாரவர்..

“இவ்விசயத்தில்  மெளனமாக  இருக்கக் கூடாது. ஒரு  முடிவுக்காக  நாங்கள்  காத்திருக்கிறோம். அங்கு  மேம்பாட்டுத்  திட்டம்  உண்டா, இல்லையா? தாசெக்  குளுகோர்  உங்கள்  பதிலுக்காகக்  காத்திருக்கிறது”, என  முகம்மட்  நஷ்ரோல்  கூறினார்.