தொழிற்சாலை திவால்: 500 தொழிலாளர்கள் பரிதவிப்பு

workerதொழிற்சாலை  ஒன்று  நொடித்துப் போனதால்  அதில்  வேலை  செய்த  500  தொழிலாளர்கள்  கைவிடப்பட்டு பரிதவிக்கிறார்கள்.

லேடாங்கில்  உள்ள  மரத்தளவாடங்கள்  செய்யும்  அத்தொழிற்சாலை  முன்னறிவிப்பு  ஏதுமின்றி  அக்டோபர்  முதல்  நாள்  மூடுவிழா  கண்டது  என  ஜோகூர்  மலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ்(எம்டியுசி)  செயலாளர்  மோகனதாஸ்  கிருஷ்ணன்  கூறினார்.

“தொழிலாளர்களுக்கு  ஆகஸ்ட், செப்டம்பர்  மாதச்  சம்பளம்  கொடுக்கப்படவில்லை. 1.10. 2014-இல்  அறிவிப்பு  ஏதுமின்றி  நிறுவனம்  மூடுவிழா  கண்டது. தொழிலாளர்கள்  கொடுபடாமல்  இருக்கும்  சம்பளத்தைக்  கேட்டார்கள். இதுவரை  முதலாளியிடமிருந்து  பதில்  இல்லை. தொடர்ந்து  வேலைவாய்ப்பு  உண்டா, இல்லையா  என்பதும்  அவர்களுக்குத்  தெரியவில்லை”, என்றாரவர்.

“அன்றாட  உணவு  வாங்குவதற்குக்கூட  அவர்களிடம்  பணம்  இல்லை.  உணவுக்காக  சைக்கிள்கள்,  மோட்டார்  சைக்கிள்கள்,  எரிவாயு  கலன்கள்  போன்ற  உடமைகளையும்  விற்றுவிட்டனர்.

“சில தொழிலாளர்களுக்கு  மற்ற  இடங்களில்  வேலை  செய்ய  வாய்ப்பு  வழங்கப்பட்டது  ஆனால், அவர்கள்  மறுத்து  விட்டனர்”, என  மோகனாதாஸ்  கூறினார்.

அதனால்  சட்டச்  சிக்கல்கள்  எழலாம்  என்றவர்கள்  அஞ்சுகின்றனர்.