எம்எச்17 விழுந்து நொறுங்கிய இடத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்தது

mhகிழக்கு  உக்ரேனில் எம்எச்17 விழுந்து நொறுங்கிய  இடத்துக்குச்  செல்ல  ஆய்வுக்குழுவினருக்கு அனுமதி  அளிக்கக் கிளர்ச்சிப்  படையினர்  முன்வந்திருக்கிறார்கள்.

விமானம்  விழுந்து  நொறுங்கிய  இடத்துக்குச்  சென்று அங்கு  சிதறிக்  கிடக்கும்  பயணிகளின்  உடமைகளைச்  சேகரிக்க  மீட்புக்குழு  அனுமதிக்கப்படும்  என  டச்சு  நீதி  அமைச்சின் பேச்சாளர்  ஜீன்  பிரான்ஸ்மேன்   தெரிவித்ததாக  சிஎன்என்  அறிவித்துள்ளது.

செப்டம்பர்  5-இல்  ஒரு  போர் ஓய்வு  காணப்பட்டாலும் சண்டை  தொடர்ந்ததால்  அப்பகுதிக்குள்  செல்ல  முடியாதிருந்தது.

இப்போது  ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு  நிறுவனத்துடன்  நடந்த  பேச்சுகளை  அடுத்து  இந்த  இணக்கம்  காணப்பட்டுள்ளது.

டச்சு  அதிகாரிகளின்  தலைமையில்  அனைத்துலகக்  குழு ஒன்று  அங்கு  ஆய்வுப் பணிகளை  மேற்கொண்டிருக்கிறது.