நஜிப்பின் அதிகாரிகளே பூமிபுத்ராக்களின் பங்குரிமை குறைவாக இருப்பதற்கு பொறுப்பு

tajபூமிபுத்ராக்கள்  30 விழுக்காடு  பங்குரிமையை  இன்னும்  அடையாமல் இருக்கிறார்கள்  என்றால்  அதற்கு பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தொலைநோக்கையும் இலட்சியத்தையும்  புரிந்துகொள்ளாமல்  பணிபுரியும்  அதிகாரிகளே  காரணம்  என்கிறார்  ஒரு  துணை  அமைச்சர்.

“பிரதமரின்  உத்வேகமும்  நோக்கமும்  அவர்களுக்கு  இல்லை. பிரதமரின்  போராட்டத்தை  அவர்கள் மதிப்பதில்லை”,என  விவசாயம்,  விவசாயம்-சார்ந்த  தொழில்  துணை  அமைச்சர் தாஜூடின்  அப்துல்  ரஹ்மான்  கூறினார்.

பூமிபுத்ராக்களின்  30 விழுக்காடு  பங்குடமை  இன்னும்  அடையப்படவில்லை  என  நஜிப்  பட்ஜெட்  உரையில்  குறிப்பிட்டது  பற்றி  அவர்  கருத்துரைத்தார்.

“சில (அரசு-சார்பு)  நிறுவனங்கள்  பூமிபுத்ராக்களிடம்  ஒப்படைக்கப்படும்  என  முன்பு  உறுதி  கூறப்பட்டது. அத்திட்டம்  என்னவாயிற்று?

“இதற்குப்  பிரதமரைக்  குறைகூற  முடியாது. அவர்  கொள்கையை  அறிவித்து  விட்டார். கஜானாதான்  அதைச்  செயல்படுத்தியிருக்க  வேண்டும்”, என்றவர்  சொன்னார்.