இஸ்மா தலைவர் அப்துல்லா ஸேக்கின் தேச நிந்தனை வழக்கு ஒத்திவைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி மற்ற தேச நிந்தனை வழக்குகளிலும் அதேபோன்ற நிலைப்பாட்டையே சட்டத்துறைத் தலைவர் பின்பற்ற வேண்டும் என டிஏபி கேட்டுக்கொண்டிருக்கிறது.
அரசமைப்புக்கு எதிராக யுனிவர்சிடி மலாயா இணைப் பேராசிரியர் அஸ்மி ஷாரோம் தொடுத்துள்ள வழக்கின் முடிவு தெரியும்வரை எல்லா தேச நிந்தனை வழக்குகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என டிஏபி-இன் பூச்சோங் எம்பி கோலிந்த் சிங் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.