பாஸ்: குறைந்த வருமானம் பெறுவோர் ‘பிஎன் சிறை’யில் வசமாக சிக்கிக் கொண்டார்கள்

ibrahim2015 பட்ஜெட் குறைந்த  வருமானம்  பெறுவோரைச் சிக்க வைக்கும்  ஒரு  பொறி  என்று  கூறும்  பாஸ்  உதவித்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான்,  அது  அவர்கள்  என்றென்றும்  அரசாங்கத்தின்  சலுகைகளை  நம்பியிருக்கும்  ஒரு  நிலையை  உருவாக்கியுள்ளது  என்றார்.

“உதவித்  தொகையைக்  குறைத்து  பிரிம் உதவித்  தொகையை  அதிகரித்திருப்பதன்வழி  குறைந்த  மற்றும் நடுத்தர  வருமானம்  பெறுவோர்  பிஎன்  உருவாக்கியுள்ள  சிறையில்  நிரந்தரமாக  சிக்கிக்  கொண்டிருக்கிறார்கள்”, என  துவான்  இப்ராகிம்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

இது  ஆட்சியில்  தொடர்ந்து  இருப்பதற்கு  பிஎன்  கையாளும்  தந்திரமா  எனவும்  அவர்  வினவினார்.