ரித்வான்: மலேசியாவில் மாடுகளைவிட பன்றிகள் அதிகமாக இருப்பது எப்படி?

ridwanசர்ச்சைகுரிய  கல்வியாளர்  ரித்வான்  டீ  அப்துல்லா,  ஆகக்  கடைசியாக  நேற்று  சினார்  ஹரியானில்  எழுதியிருந்த  பத்தியில்  மலேசியாவில் ஜனநாயகத்தின் குறைபாடுகள்  பற்றியும்  பன்றிகள்  எண்ணிக்கை  அதிகமாக  இருப்பது  பற்றியும்  கருத்துத்  தெரிவித்துள்ளார்.

“பன்றிகள்  பற்றி  இழிவாக  பேச  வரவில்லை. ஏனென்றால்  அவையும்  அல்லாவின்  படைப்புகளே. ஆனால், ஆடு, மாடு,  கோழி, வாத்து  ஆகியவற்றின்  எண்ணிக்கையைவிட   பன்றிகள் எண்ணிக்கையில்  அதிகமாக  இருப்பதை  என்னால்  ஏற்க  முடியாது.

“நம்  நாட்டில் கால்நடைகள்  குறைவாக  உள்ளன. அவற்றை  இறக்குமதி  செய்ய  வேண்டியுள்ளது.

“ஆனால், பன்றிகளின்  எண்ணிக்கை  அதிகமாகவே  உள்ளது. அவற்றை  நிறைய  ஏற்றுமதி  செய்கிறோம். இதுக்கு  என்ன  அர்த்தம்?”, என்றவர்  கேட்டிருந்தார்.

இந்நிலையில் சிலாங்கூர்  மந்திரி  புசார் முகம்மட்  அஸ்மின் அலி  அம்மாநிலத்தில்  ரிம100  மில்லியன்   பன்றிப் பண்ணைத்  திட்டத்துக்கு  அங்கீகாரம்  வழங்கப்  போகிறாரா  எனவும்  அவர்  தெரிந்துகொள்ள  விரும்பினார்.