‘Hot Porn’ என்ற தலைப்பைக் கண்டு கொதிப்படைந்துள்ளது என்ஜிஓ

titleஒரு  செய்திக்கு  இப்படியா  தலைப்பிடுவது  என்று  சீறி  எழுந்த என்ஜிஓ-வான  மகளிர்  உதவி  அமைப்பு  (டபிள்யுஏஓ),   “அது  பாலியல்  உணர்வுகளைத் தூண்டுகிறது,  பெண்களை அவமதிக்கிறது, கலாச்சாரப்  பண்புகளைச்  சற்றும்  மதிக்காதது”  என்று  சாடியுள்ளது.

அக்டோபர்  12-இல், த  ஸ்டார்  நாளிதழில்,  கோலாலும்பூரில், சைம் டார்பி  கோல்ப்  போட்டியில்  கலந்துகொண்ட  தாய்லாந்து  பெண்  கோப்ல்  ஆட்டக்காரர்  போர்னானொங்  பாட்லும்  பற்றிய  செய்திக்கு  ‘Hot Porn’ என்று  தலைப்பிடப்பட்டிருந்ததுதான்  அதன்  கோபத்துக்குக்  காரணமாகும்.

“த  ஸ்டார்  மலேசிய பத்திரிகைக்  கழகத்தின்  ஒழுக்க  நெறிகளைப்  பின்பற்றி  பரபரப்பானதும்  உணர்வுகளைத்  தூண்டுவதுமான  தலைப்புகளைத்  தவிர்க்க  வேண்டும்  என டபிள்யுஏஓ  வலியுறுத்த  விரும்புகிறது”, என்றது  கூறிற்று.