அமைச்சர்: தர வரிசையில் மலேசிய பத்திரிகைகள் தாழ்ந்த இடத்தில் இருப்பதற்கு டிஏபிதான் காரணம்

pressமலேசியாவில்  பத்திரிகை  சுதந்திரம்  தாழ்ந்து  போனதற்கு டிஏபிதான் காரணமாம்.  தகவல், பல்லூடக  அமைச்சர்  அஹமட்  ஷப்ரி  சிக்  கூறுகிறார்.

இன்று  நாடாளுமன்ற  கேள்வி  நேரத்தின்போது,  இங்கா  கோர்  மிங் (டிஏபி- தைப்பிங்),  எல்லைகளற்ற  செய்தியாளர்கள்  அமைப்பின் பத்திரிகைச்  சுதந்திர தரவரிசைப்  பட்டியலில்  (பிஎப்ஐ)  இடம்பெற்றுள்ள  180  நாடுகளில்  மலேசியா  147-ஆவது  இடத்தில்  இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலடியாக  அஹ்மட்  ஷப்ரி, டிஏபி-யால்  வழிநடத்தப்படும்  பினாங்கு  அரசு  அதன்   சட்டமன்றத்தில்  செய்திகள்  சேகரிப்பதற்கு  உத்துசான்  மலேசியாவுக்கு  விதித்த  தடைதான்  அதற்குக்  காரணம்  என்றார்.

“பினாங்கு  சட்டமன்ற  நடப்புகள்  பற்றி  செய்தி  சேகரிக்க  உத்துசானுக்கு  அனுமதி  இல்லை. இங்கு (நாடாளுமன்றத்தில்)  செய்தி  சேகரிக்கக்  கூடாது  என  எங்கள் (பிஎன்)  அரசாங்கம்  செய்தித்தாள்களை  அல்லது  மலேசியாகினியைத்  தடுக்கிறதா…

“பினாங்குதான்  ஊடகங்களுக்குத்  தடை  போடுகிறது…. பத்திரிகைச்  சுதந்திரம்  தாழ்ந்த  இடத்தில் இருக்கிறதென்றால்  அதற்கு (கூட்டரசு)  அரசாங்கம்தான்  பொறுப்பு  என்றாகாது. பினாங்கு  அரசு  ஊடகங்களுக்கு  தடை விதித்ததும்  அதன்  வீழ்ச்சிக்குக்  காரணமாகும்”, என்றார்.