டிஏபி அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹோக்கின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் மேற்கொண்டிருக்கும் புலனாய்வைக் கமுக்கமாக நடத்த வேண்டியதில்லை.
சிரம்பான் எம்பி, தியோ கொக் சியோங்குக்கு அளித்த எழுத்து வடிவிலான பதிலில் உள்துறை அமைச்சு அவ்விசாரணையின் நிலையைத் தெரிவிக்க இயலாது என்று கூறியதை அடுத்து இவ்வாறு கூறப்பட்டது.
“விசாரணை நிலவரத்தை அமைச்சு அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
“விசாரணைக்கு இடையூறாகும் எனத் தகவலளிக்க மறுப்பது சரியான காரணமாகாது. வெளிப்படையான விசாரணை நடப்பதையே நாங்கள் விரும்புகிறோம்”, என தியோ நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கொலையும் அல்ல,தற்கொலையும் அல்ல என்று ஏற்கனவே
தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது,இன்னும் என்ன விசாரணை ?
இது காத்து சேட்டையின் வேலை.