பாஸ் தன் எதிர்ப்பையும் மீறி சிலாங்கூரில் அக்டோபர்பெஸ்ட் விழா நடத்தப்பட்டதைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ளது.
சிலாங்கூர் பக்கத்தான் மாநிலம் என்றும், “டிஏபியும் பிகேஆரும் மட்டும் அதை ஆளவில்லை” என்றும் கூறிய பாஸ் உலாமா மன்ற உதவித் தலைவர் மாபோட்ஸ் முகம்மட், தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை மற்ற இரண்டு கட்சிகளும் கருத்தில் கொண்டிருந்திருக்க வேண்டும் என்றார்.
“அவை கிழக்கத்திய மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பின்பற்றி மது அருந்தும் நிகழ்வுக்கு ஊக்கம் அளித்திருக்கக் கூடாது. அதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம்”, என்றவர் உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.
இவ்விவகாரத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் மவுனமாக இருப்பதையும் அவர் சாடினார்.
இந்த தகவலை அம்னோவின் பத்ரிக்கையில் செய்தியாக
கொடுத்த மர்மம் என்ன ?
அக்டோபர்பெஸ்ட் விழாவுக்கு இலாமியர்கள் வாராமல் தடுப்பதுதான் உன்னுடைய வேலை ! விழவே நடக்ககூடாது என்று தடுப்பது உன்வேலை இல்லை ! இது பல்லின, மத, சார்ந்த நாடு !
இதே நிலை தான் நடந்து முடிந்த மாநில மந்திரி புசார் விவகாரத்திலும்.அன்று பாஸ் கட்சியினர் PKR மற்றும் DAP கட்சியினரின் கருத்தையும் வேண்டுகோளையும் மதிக்கவே இல்லை.முற்பகல் செய்த வினை பிற்பகலில் அறுவடை செய்கிறது paas கட்சி.
மக்கள்/ PAS KITA tak da PERCAYA LU லகி