பிரிம் உதவியும் கிடையாது வருமான வரிக்குறைப்பும் இல்லை

incomeபட்ஜெட்  2015, நடுத்தர  வருமானம்  பெறும்  தரப்பினரைத்தான் கசக்கிப்  பிழிகிறது  என பொருளாதார  சிந்தனைக்  குழாம்  ஒன்று  கூறுகிறது.

ஆண்டுக்கு  ரிம55,000-இலிருந்து  ரிம100,000வரை  வருமானம்  பெறும்  இப்பிரிவினருக்கு அரசாங்கத்தின்  உதவித்  தொகை  கொடுக்கப்படுவதில்லை; வருமான  வரிக்குறைப்பினாலும்  அவர்கள் பயனடைவதில்லை  என  பினாங்குக்  கழகம்  குறிப்பிடுகிறது.

“நடுத்தர  வருமானம் பெறும்  குடும்பங்களுக்கு  1மலேசியா  உதவித்  தொகை  கிடைப்பதில்லை, வரிக்குறைப்பாலும்  அதிகம்  நன்மை  அடைவதில்லை. ஆனால்  பொருள்,  சேவை  வரி  மட்டும்  செலுத்த  வேண்டியிருக்கும்”, என்று  அக்கழகம்  கூறியது.

இந்த  இரட்டைத்  தாக்கத்தினால்  அவர்களிடம்  செலவிடுவதற்குப்   பணம்  குறைவாகவே  இருக்கும்.

ஒரு சராசரி  மலேசிய  குடும்பம்  மாதந்தோறும்  ஜிஎஸ்டிக்காக  அதன்  வருமானத்தில் ரிம70  அல்லது 1.9  விழுக்காடு  செலவிட  வேண்டியிருக்கும்  என  அக்கழகம்  மதிப்பிடுகிறது.