நடவடிக்கை எடுக்க ரோஸ் தயக்கம், மஇகா தலைவர்கள் நஜிப்பின் உதவியை நாடுகின்றனர்

 

micஎதிர்வரும் வியாழக்கிழமை 2,500க்கும் மேற்பட்ட மஇகா கிளைத் தலைவர்களும் இதர தலைவர்களும் புத்ரா ஜெயாவில் பிரதமர் நஜிப்பிடம் ஒரு மகஜர் அளிக்க விருக்கின்றனர்.

கடந்த ஜனவரில் நடந்த மஇகா தேர்தல் குறித்து சங்கங்கள் பதிவாளரிடம் (ரோஸ்) தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வரும் அந்த இலாகா பதிவாளர் குறித்த தங்களின் அதிருப்தியை பிரதமரிடம் தெரிவிப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் டி மோகன் கூறினார்.

“பத்து மாதங்கள் ஆகிவிட்டன. ரோஸிடமிருந்து இன்று வரையில் ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இது போன்ற புகார்கள் மீது அது மிகுந்த வேகத்துடன் செயல்பட்டது.

“புகார் செய்தவர்கள் மற்றும் கட்சி தலைவர்களிடைருந்து வாக்குமூலங்களைப் பெற்ற பின்னரும் ஒரு முடிவெடுக்க ஏன் ரோஸுக்கு இவ்வளவு காலம் பிடிக்கிறது”, என்றாரவர்.

கிளைத் தலைவர்கள் பொறுமை காத்துள்ளனர். ஆனால், அதற்கும் ஓர் அளவு உண்டு என்று மோகன் எச்சரிக்கை விடுத்தார்.