பைபிளை எரிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதற்காக எதிரணியினர் அரசாங்கத்தைக் கடுமையாக குறைகூறி வந்தனர். அதனால் சினமடைந்த ஒரு சாபா பாரிசான் எம்பி அப்புனித நூல் எரிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தை காட்டுமாறு எதிரணியினரிடம் கேட்டுக்கொண்டார்.
“பொதுத் தேர்தலில் போது, (எதிரணியினர்) பிஎன்னுக்கு போடும் ஒரு வாக்கு எரிக்கப்பட்ட ஒரு பைப்பிள்ளுக்கு சமமானது என்ற படங்களை காட்டினர். ஆனால், இப்போது, எரிக்கப்பட்ட பைபிள்கள் இருக்கின்றனவா?
“எரிக்கப்பட்டிருக்கின்றனவா?, சொல்லுங்கள்” என்று பிஎன் பூதாதான் எம்பி மார்கஸ் மாஜ்கோ, டிஎபி எம்பி சோங் சிஎங் ஜென் பட்ஜெட் விவாதத்தில் பேசிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, பாஸ் ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் பைபிளை எரிப்பேன் என்று மிரட்டல் விட்ட பெர்காசாவின் இப்ராகிம் அலி அவ்வாறு கூறியது ‘இஸ்லாத்தை தற்காக்கத்தான்’ என்று புத்ரா ஜெயா கூறியிருப்பது பற்றி அதிகமான கிறிஸ்துவ மக்களைக் கொண்ட சாபா மற்றும் சரவாக் எம்பிகள் மௌனமாக இருப்பது ஏன் என்று வினவியிருந்தார்.
பதவி என்று வந்துவிட்டால், மதமாவது மண்ணாங்கட்டியாவது? .
சபா , சரவாக் கிருஸ்துவ மக்களும் சரி ஆளும் கட்சி சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி அனைவரும் சொரணை இழந்த செம்மறி ஆடுகளாக போய்விட்டனர்..?
அவர்கள் எதிர்த்தால் தேவை இல்லாத சட்டங்கள் அவர்கள் மீது பாயும்.இங்கு எல்லா சட்டங்களும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.அதனால்தான் ஒரு மதத்தின் புனித நூலையே எரிப்பேன் என்று சொன்னவன் இன்னும் சுதந்திரமாக கேடித்தனம் செய்து கொண்டிருக்கிறான்.அவனுக்கு போலிஸ் வக்காலத்து வேறு.ஒரே மலேசியா என்று ஒற்றுமை உணர்வை பற்றி பேசுபவர்கள் சபா,சரவாக்கில் வசிக்கும் பூர்வீக கிறிஸ்தவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்.அவர்களுக்கு எதிராக செயல் பட்டால் ‘தாங்கள் தனிமை படுத்தப் பட்டுள்ளோம்’ என்று அவர்கள் என்னும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடும்.
சாபா மற்றும் சரவாக் வாழ் மக்கள் எல்லோருமே ஒரு மொழியையும் இனத்தையும் சேர்ந்தவர்களானாலும் சமய நம்பிக்கையில் அவரவர் தனித்தனி சமயத்தை பின்பற்றுகின்றனர். இந்நாள் வரையில் அவர்களுக்கிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. அனால் சிறிது சிறிதாக அவர்களிடையே வேறுபாடுகள் விரிசல் காணப்படுகிறது. அதற்கு காரணம் ஏழ்மையில் வாழும் மக்களுக்கு வயிறு மட்டுமே முக்கியம். ஆக வசதிகள் கிடைக்கும் இடத்தில் நிற்பார்கள். அதனிலும் அரசியல்வாதிகள் பெரும் கில்லாடிகள். தனக்கு தனக்கு என்றால் பு …………. களையெடுக்கும் என்பதற்கொப்ப தங்களது சுய நலத்திற்க்காக தனது சமய நம்பிக்கை,இன உணர்ச்சி போன்றவற்றையும் அடகு வைத்துவுடுவார்கள். நமது தலைவர்களை பற்றி நாம் அதிகம் தெரிந்து அவர்களை குறைகூரியுள்ளோம். கிழக்கு மலேசிய தலைவர்களும் இவர்களை போலதான். அதனால் அந்த கிழக்கு மலேசிய M .P .கூறியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. எந்த சமய நூலும் அவமரியாதை செய்யபபடகூடாது. நமக்கு பிடிக்கவில்லையோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதனை நாம் விட்டுவிடவேண்டுமேயன்றி அதனை அழிக்க கூடாது. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ என்ற ஒரு அறிஞரின் கூற்றுக்கேற்ப அந்த மல்லிகையையும் மணம்பரப்ப விடவேண்டும். இன்று இந்த அரசியல்வாதி இப்படி பேசிவிட்டு நாளை மறைந்து விடுவான் , நாளை என்னவாகும்? மேலும் நாம் பெரும்பாலும் சமய நம்பிக்கை என்று வரும்போதும் சரி மற்றவைகளிலும் சரி நாம் அவைகளை சகித்துக்கொள்ளவேண்டும் என்றே கூறுவார். ஆனால் சகிப்புக்கு ஒரு எல்லையுண்டு. எல்லை மீறினால் பிரச்சினைதானே?. அதனால் நாம் மற்றவர்களின் சமய நம்பிக்கை அவரவருடைய நம்பிக்கையையே என்று ஏற்றுக்கொண்டு இருந்துவிடவேண்டும். மாறாக அவைகளை விமர்சனம் பண்ண கூடாது. விரும்பினால் மேலும் அவைகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் பரந்த எண்ணமுடனும் சுமூகமாகமகவும் கலந்து உரையாடவும் உறவாடவும் வேண்டும். அப்புறம் உலக நாடுகள் அனைத்திற்கும் நாமே முன் உதாரணமாக இருப்போம். சமய நம்பிக்கைக்கு முன் மனிதர் மனிதாராகத்தான் பிறந்தோம். பெரும்பாலோர் தாம் பிறந்த சூழ்நிலைக்கேற்ப பெற்றோரின் சமய நம்பிக்கையில் வளர்க்கப்பட்டு அதனையே நமது நம்பிக்கையாகவும் எற்றுக்கொண்டுக்கொண்டோம் என்றால் அது மிகைப்படுத்துவது ஆகாது. அதனால் நம்மிடையே உள்ள வேறுபாடுகளை நோக்காமல் நம்மிடையே உள்ள ஒற்றுமைகளையும் நன்மைகளையும் பார்த்து நலமுடனும் வளமுடனும் வாழ இறைவன் நம்மை ஆசீவதித்து வழிநடத்துவாராக.
இப்போது தானே பயமுறுத்தல் வந்திருக்கிறது. இனி மேல் எரிப்பதற்கு இப்போது தானே சட்டத்துறை அனுமதி கிடைத்திருக்கிறது.
தேசிய முன்னணியில் உள்ள அம்னோ அல்லாத அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அம்னோவின் அடிமைகள்.அம்னோவை எதிர்த்து கேள்வி கேட்க துணிவு இல்லாதவர்கள்.இது தான் கடந்த 1957 ஆம் ஆண்டிலிருந்து நடந்துக் கொண்டிருக்கிறது.இந்த கொத்தடிமைகள் சபாவிலும் சரவாகிலும் மற்றும் இங்கு ( திப கட்பத்திலும் ) இருக்கின்றனர்.குறிப்பாக ம சி ச , ம இ கா, கெரக்கான் போன்ற கட்சிகளை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்னோவின் அடிமைகள்.இந்த அடிமைகள் ஒரு போதும் தங்களது இனத்திக்காகவோ அல்லது மதத்திக்காகவோ குரல் கொடுக்க மாட்டார்கள்.இந்த கொத்தடிமைகளை வில்ல்த்தினால் தான் நமது வருங்கால தலை முறை இனர் இந்த நாட்டில் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்.ஆகவே மாற்றுவோம். வாரீர் என்று அனைவரையும் அலைகிறேன் வாரீர்.