ஹெலோயீன் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு

 

Apaஅக்டோபர்பெஸ்ட் பீர் கொண்டாட்டம் மற்றும் நாய் தொடுதல் நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மிதவாதிகள் இப்போது நெகிரி செம்பிலானில் நடத்தப்படவிருக்கும் ஹெலோயீன் (Halloween) கொண்டாட்டதிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பல இஸ்லாமிய கூட்டத்தினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஓர் அனைத்துலக பள்ளியில் நடத்தப்பட விருந்த ஹெலோயீன் இரவு நிகழ்ச்சியை விளப்பரப்படுத்தும் பதாதைகள் மற்றும் விளம்பர அட்டைகள் ஆகியவற்றை சிறம்பான் நகராட்சி மன்றம் அகற்றியதாக கூறப்படுகிறது.

ஹெலோயீன் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமலும், அது சர்ச்சையை உண்டாக்கும் என்பதை உணராமலும் அம்மன்றம் அந்நிகழ்ச்சிக்கு முன்னதாக அனுமதி வழங்கிற்று என்று சினார் ஹரியான் நேற்று கூறிற்று.

நான்கு மணி நேரத்திற்கான அந்த ஹெலோயீன் கொண்டாட்டம் அக்டோபர் 31 இல் பண்டார் ஸ்ரீ செண்டாயனிலுள்ள ஓர் அனைத்துலகப் பள்ளியில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படவே கூடாது ஏனென்றால் அது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானவை என்று பல இஸ்லாமிய அமைப்புகள், இஸ்மா உட்பட, எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு பள்ளியில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது குழந்தைகளுக்கு “மேல்நாட்டு போதனைகளை” பரப்புவதற்கான முயற்சியாகும் என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டின.

சினார் ஹரியானின் முதல் பக்கத்தில் “ஏற்பாட்டாளர்களின் நோக்கம் என்ன? என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.