தன்னார்வலர் அலி அப்துல் ஜாலில் நான்கு முறை கைது செய்யப்பட்டவர்; பல தேச நிந்தனை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர். இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தைரியமாக இருந்தவர் திடீரென்று நாட்டை விட்டு வெளியேறினார்.
அலி நாட்டை விட்டு வெளியேறி இறுதியில் சுவீடன் நாட்டில் தஞ்சம் புகுந்தார். அதற்குக் காரணம் தேச நிந்தனை குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவதற்காக அல்ல. அவர் தமது உயிருக்கு அஞ்சியதாகக் கூறுகிறார்.
தமக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டது என்றும், தமக்கு பாதுகாப்பு ஏதும் இல்லை என்பதாலும் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே தாம் நாட்டை விட்டு வெளியேறி சுவீடன் சென்று அங்கு அடைக்கலம் கோரியிருப்பதாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அன்று இந்துக்கள் இவ்னகளைபோல் இருந்திருந்தால் இன்று ………….. இங்கு பரவி இருக்க முடியாது.