என்ஜிஓ-கள்: உலகம் கூட்டரசு நீதிமன்றத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருகிறது

courtஎதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டுக்கு  எதிரான  மேல்முறையீடு  நாளை  விசாரணைக்கு வரும்போது  மலேசியாவின்  உச்ச  நீதிமன்றம்  அனைத்துலகத்  தரத்துக்கு  ஏற்ப  நடந்துகொள்கிறதா  என்பதை  உலகம்  உன்னிப்பாகக்  கவனித்துக்  கொண்டிருக்கும்.

“கூட்டரசு  நீதிமன்றத்தின்  தீர்ப்பு  மலேசிய  நீதித்துறையின் தரத்தைத்  தீர்மானிக்கும்.

“மலேசியா,  ஏற்கனவே  கண்டனத்துக்கு இலக்காகியுள்ள  நீதித்துறையின்  மதிப்பை  நிலைநிறுத்த  விரும்பினால்  அரசியலை நீதிமன்றத்துக்குள்  கொண்டுவரக்கூடாது”, என  அனைத்துலக  மனித  உரிமைக்  கூட்டமைப்பின்  தலைவர்   கரிம்  ல்ஹிட்ஜியும்  அந்தக்  கூட்டமைப்பில்  உறுப்பு  வகிக்கும்  சுவாராமின்  செயல்முறை  இயக்குனருமான  யாப்  சுவி  செங்கும்  கூட்டறிக்கை  ஒன்றில்  கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை  நடந்துள்ளவற்றைப்  பார்க்கையில்  விசாரணைகள்  நியாயமாக  நடந்திருப்பதாக  தெரியவில்லை.

“மலேசிய  நீதித்துறை  நீதியை  முறைகேடாகப்  பயன்படுத்துவதையும்  அன்வார்  இப்ராகிம்மீது  குறைபாடுடைய  வழக்குகள்  தொடுப்பதையும்  நிறுத்திக்கொள்ள  வேண்டும்”,  என்று  யாப்  கூறினார்