பிஎன்னும் பக்கத்தான் ரக்யாட்டும் உள்ளுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருக்கையில் ‘இடச்சாரிகளை’க் கொண்ட ஒரு புதிய அரசியல் கூட்டணி உருவாகி வருகிறது.
ஜனவரியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புதிய கூட்டணியை அமைப்பதில் முனைப்புக் காட்டும் கட்சிகள் பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வும் பார்டி ரக்யாட் மலேசியாவும் ஆகும். அவை, சாபா, சரவாக் மாநில சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து அக்கூட்டணியை அமைக்கும்.
அதை மலேசிய அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவாக்குவது அவற்றின் நோக்கம்.
அனுபவம் வாய்ந்த சமூக ஆர்வலர்களான டாக்டர் குவா கியா சூங், ஐரின் சேவியர், சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா-வின் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் (ச்சேகுபார்ட்) போன்றோர் அக்கூட்டணியை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறிய பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் அது பஹாசா மலேசியாவில் ‘காபோங்கான் கீரி’ என அழைக்கப்படும் என்றார்.
“இப் புதிய இடச்சாரி கூட்டணி 10-அம்ச திட்டமொன்றைக் கொண்டுள்ளது. அதை 2015 ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டிருகிறோம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
வாழ்க …வளர்க ..வரவேற்போம் ..
உங்க இடது சாரிக்கு ஆதரவு அந்த 5 பேராகத்தான் இருக்க முடியும். கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுண்டம போவானா?. உங்க கட்சியின் கொள்கையை மலேசிய மக்களிடம் எவ்வாறு விற்பது என்று தெரியாமால் உங்களுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ஒரு சில பேச்சாளர்களைப் பார்த்த பொழுது நானே மயங்கி போய் கூட்டத்தை விட்டு வெளியேறினேன். இருக்கின்ற கூட்டணி போதும். இருக்கின்ற 2 இடங்கள் கூட இல்லாமல் போவதற்கு வழி கோல வேண்டாம் அன்பு செல்வா!.
காலம் கடந்து வந்தாலும், நல்ல முயற்சி.! பெயர்களை கன்னுற்றதுமே, இது சுயநலமற்ற பேர்வழிகளால் அமைக்கப்படும் கூட்டணி என்பது தெளிவாகிறது. Good Luck !
சுயநலமற்ற கூட்டணி என்றாவது அரசியலில் வென்றது உண்டா சிங்கம் அவர்களே?. நல்லவர்களுக்கு அரசியலில் நல்ல பெயர் கிடைக்கும் ஆனால் அரசியல் முன்னேற்றம் கிடைக்காது. சம்பந்தருக்கும், சாமிவேலுக்கும் உள்ள வித்தியாசம்தான்.
நீங்க எத்தனை கூட்டணி அமைத்தாலும் ,நாசமா போவது மக்கள் தான் .போயி உருப்படியான வேலைய பாருங்க ,55 வருசமா இந்த நாடும் முன்னேற வில்ல மக்களும் முன்னேறவில்ல ,எதையும் அனுபவிக்க முடியாம இந்த நாத்தம் புடிச்ச நாட்டில் இருந்து சாக வேண்டியதுதான் ,மிச்சம்
தேனி, அருமையான கருத்து.
இவனும் இவன் கூட்டமும் ஆடிய ஆட்டத்தில் இரண்டு இடத்தை இழந்தது மக்கள் கூட்டணி.எல்லாம் $$$ !!! மக்களை முட்டாளாக்கி இவனுங்க பணம் பார்த்தனுங்க!
இடசாரி கட்சிகள் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது நடுநிலை அறிவு சார்ந்த கட்சிகள் தான் தேவை ஆனாலும் அம்னோ போன்ற கட்சிகள் பணத்தின் வழி ஆட்சியில் பல காலம் உட்கார்ந்து இருக்க முடியும். காரணம் இன்றைய நிலையில் பெரும்பான்மை மக்கள் குறிப்பாக மலாய்க்காரன் கள் கொள்கையில்லா…… ஆங்கிலப்பள்ளிகள் இருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும்.
நீங்க கூட்டனி அமைத்து பி.என்.அல்லது பக்காதான் ராயாட் எந்த கட்சியுடன் கைகோர்க்க போறிங்க…? அப்படியில்லாம தனித்து நின்றால் ஒரு இடம் கூட கிடைக்காதே..?
அய்யா தேனி அவர்களே, பேடைப் பேச்சை வாரி இரைத்து மக்களின் நெற்றியில் நாமம் போடுபனைத்தான் நீங்கள் நம்புகிறீர்கள். அரசியலுக்கு வந்த வேலையை உண்மையில் செய்யும் இவர்களை ஏன் வைகிறீர்கள்.
நாராயண நாராயண.
தோழர்களே, சில வேளைகளில் கருத்து கூறுவதில் முனைப்பு காட்டும் நாம், உண்மை நிலவரங்களை அறிவதில் தவறி விடுகிறோம். 55 வருட நாற்றத்தை, இன்னும் தாங்கிக் கொண்டிருக்க முடிவெடுத்தது இந்த மக்கள்தான் / நாம்தான். அவர்களுக்கு ஒரு தெளிவு கொடுத்து; முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டியது சமூகத் தலைவர்களின் கடப்பாடு. நாற்றத்தில் சாக துணிந்தவர்களும் , கொள்கை புரியாமல் மயங்கி போனவர்களும் இச்சமூகத்தை வழிநடத்த வக்கத்தவர்கள். ஆக, இவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கதான் தகுதியானவர்கள்…….மாற்றியமைக்க பாடுபடுபவர்களை குறைகூறும் தகுதி இவர்களுக்கு இல்லை.
தேர்தல் காலத்தில் , திரை மறைவில் அரங்கேறிய நாடகங்கள் பல. அது அவரவருக்குத் தெரியும். வெளியில் நின்று வெறுமனே புழுதிவாரி எரிவது சுலபம்….. களத்தில் நின்று போராடுவது கடினம். ஆக, போற்றாவிட்டாலும்; தூற்றாமல் இருப்பது சமூகக் கடப்பாடு கொண்டவர்களுக்கு சிறப்பு.
இன்று, மலேசிய அரசியலில் சொத்து மதிப்பை மக்களுக்கு அறிவிக்கும் மக்கள் பிரதிநிதி யார்? நான் தலைவன் எனும் மமதை இல்லாமல், தொகுதி மக்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து, அவற்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வது யார்? இலவசக் கல்வி, இலவச மருத்துவம், ஜி.எஸ்.தி.& தி.பி.பி.ஏ. எதிர்ப்பு, குறைந்தபட்ச சம்பளம் என மக்கள் நலனுக்காக, பாசாங்கு இல்லாமல் ; மக்கள் பணியாற்றுவது யார்? மக்கள் நலனைக் காக்கதான் அரசியல் கட்சிகள்/ அரசியல் தலைவர்கள். அதனை செய்யத் தவறியவர்களை ஏற்றுக்கொண்ட நீங்கள், செய்பவர்களைக் குறைகூறுகிறீர்கள்.
சற்று சிந்தித்து பாருங்கள்!
போதுமடா சாமிகளா என்று ஆம்பிளைகங்கா அடிச்சிக்க இப்ப இஅவ்னக வேற புத்தி சொல்ற மாத்ரி ஆரம்பிச்சி வெந்த வெங்காயம் மாறி உள்ளப்பல் கருத்து ………”மக்கள் பணியாற்றுவது யார்? மக்கள் நலனைக் காக்கதான் அரசியல் கட்சிகள்/ அரசியல் தலைவர்கள். அதனை செய்யத் தவறியவர்களை ஏற்றுக்கொண்ட நீங்கள், செய்பவர்களைக் குறைகூறுகிறீர்கள்.
சற்று சிந்தித்து பாருங்கள்!” இவங்க யாருங்கோ? மக்களா ? அரசியலா ?தலைவியா? தூக்கு தூக்கியா?
அரசியல் ஒரு சாக்கடை என்று கூறும் எவனும் இறங்கி சுத்தம் செய்வதில்லை. சாக்கடையில் முழ்கி பழகி விட்டனர். அவர்களுக்கு சுத்தம் செய்பவர்களை பார்த்தல் நாறும்! ஒரு வித அலர்ஜி! சே பாரதி
சிவரஞ்சனி அம்மையாரே, மேடைப்பேச்சில் மயங்கி விழுபவன் நானல்ல. P.S.M. கட்சியின் சார்பில் நின்றவருக்கு கடந்த தேர்தலில் ஓட்டுப் போட்டுவர்களில் நானும் ஒருவன். அரசியலில் நல்லதைச் சொல்பவர்களுக்கும், செய்பவர்களுக்கும் நன்றி செலுத்தாமால் பணத்திற்கும், அரிசி பருப்பிற்கும் ஓட்டுப் போடும் மக்களில் தயவு செய்து என்னையும் சேர்த்து விடாதீர்கள்.
அரசியல் சாக்கடையை சுத்தம் செய்பவர்களைக் கண்டு எள்ளி நகையாடவில்லை. P.S.M. அன்பர்களின் ஆதங்கம் புரிகின்றது. அரசியலில் மேம்பட வழியைப் பாருங்கள் என்கின்றேன். இடது சாரி அணி என்பது மலாய்க்காரர்களுக்கும், மலேசிய மக்களுக்கும் புரியாது. ஒருகால் கியூபா மக்களுக்கு புரியுமோ என்னவோ தெரியவில்லை.
அம்மா சாந்தலெட்சுமி அவர்களே, எமக்கும் தங்களின் கருத்தில் வேறுபாடு கிடையாது. ஆனால், கூட்டணி என்பது வெற்றிக்கனியை பறிப்பதாக இருக்க வேண்டும். அதற்கு அரசியல் மாய ஜாலங்கள் வேண்டும். இப்பொழுதே P.S.M. கட்சிக்கு கம்னியூஸ்ட் கட்சி என்று முத்திரை குத்தி வைத்திருக்கின்றனர் பாஸ் கட்சிக்காரர்கள். இதற்கு மேலும் இடது சாரி என்று தங்களை முத்திரைக் குத்திக் கொண்டால். நீங்களும் நானும்தான் ஓட்டுப் போடுபவர்களாக இருப்போம். மலாய்க்காரர்கள் ஒட்டு கிடைக்காது. இதுதானே கடந்த தேர்தலில் P.S.M. கட்சிக்கு நடந்தது. இந்த பாஸ் கட்சிக்காரர்களால்தானே இரண்டு இடங்களில் சிலாங்கூரில் தோற்க நேரிட்டது.
Bn சரியில்லை என்று பக்கதானை நம்பினால், இவர்கள் ஒற்றுமையை (சிரிப்பு வருவது அது வேறு விசியம்) பார்த்தால் BN எவ்வளோவோ பரவயில்லை. 3 வது அணி 4 வது அணி 5 வது அணி என்று வந்தால்தான் நாடு உருப்படும். நமக்கும் பொழுது போகும். நம் பத்திரிகைக்கும் வியாபாரம் நடக்கும். பாவம் மக்கள்.