யுனிவர்சிடி மலேசியா திரெங்கானு (யுஎம்டி), ரிம14 மில்லியன் செலவில் ‘சிறப்புப் பணிகளுக்குப் பயன்படும்’ கப்பலொன்றைக் கட்டத் திட்டமிட்டது. ஆனால், இறுதியில் உருவானதோ ஒரு சரக்குக் கப்பலாகும்.
அந்த வகையில் பணம் “வீணானதாக” பொதுக் கணக்குக் குழு (பிஏசி), இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கண்டித்துள்ளது.
இத்திட்டம்மீது மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் புலனாய்வு நடத்த வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.
அத்திட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் யுஎம்டி உதவி- வேந்தர் அப்துல் அசீஸ் டெரமான்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அக்கப்பல் கட்டும் திட்டத்தில் செய்யப்பட்ட பல முடிவுகள் குத்தகையாளருக்குச் “சாதகமாக இருப்பதுபோல் தெரிகிறது”, என்றும் அது குறிப்பிட்டது.