யுஎம் சுல்தானின் சொல்லை மதிக்க வேண்டும்

um malayaமலாயாப்  பல்கலைக்கழகம், அதன்  வேந்தர்  பேராக்  சுல்தான்  பல்கலைக்கழகச்  சுதந்திரம்  காக்கப்படுவது  அவசியம்  எனக்  கூறியிருப்பதைக்  கருத்தில்கொண்டு  அதன்  முன்னாள்  மாணவரும்  எதிரணித்  தலைவருமான  அன்வார்  இப்ராகிமின் சொற்பொழிவைத்  தடுக்கும்  திட்டத்தைக்  கைவிட  வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களிடையே  அன்வார்  பேசுவதைத்  தடுக்கும்  யுஎம்-மின்  செயல்,  சுல்தான்  நஸ்ரின்  முய்ஸுடின் ஷாவின்  அறிவுரைக்கு  முரணாக  இருப்பதை   சொலிடேரிடி  அனாக்  மூடா  மலேசியா (எஸ்ஏஎம்எம்)  சுட்டிக்காட்டினார்.

“யுஎம்  வேந்தரான  சுல்தான்,   திறந்த  மனம்  வேண்டும்  என்று  ஒரு  முறை  கூறினார்.

“திறந்த  மனம்  புதுப்புதுச்  சிந்தனைகள்  வளரவும் புத்தாகக்  கலாச்சாரம்  உருவாகவும்  ஆக்கத்  திறன்  மேம்படவும் வழிவகுக்கும்”, என்ரவர்  கூறினார்.

ஆனால்,  யுஎம்  நிர்வாகத்தின்  நடவடிக்கைகள்  அதன்  வேந்தர்  வலியுறுத்திய  திறந்த  மனத்துக்கு  எதிராக  அமைந்துள்ளன  என்றாரவர்.