தண்ணீர் குழாய்களைப் பழுதுபார்க்க ரிம11 பில்லியன் தேவை

pipeபழையதாகிப்போன   அத்தனை  தண்ணீர்  குழாய்களையும்  பழுதுபார்க்க  ரிம11 பில்லியன்  தேவைப்படும்.இவ்வளவு  பெரிய  தொகையைச்  செலவிட  வளரும்  நாடுகளால்  இயலாது.

நாடாளுமன்றத்தில்  எரிபொருள், பசுமைத்  தொழில்நுட்பம்,  தண்ணீர்  அமைச்சு ங்கா  கொர்  மிங்(டிஏபி- தைப்பிங்)-க்கு வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில்  இவ்வாறு  கூறியது. அடுத்த  ஆண்டு  முடிவுக்கு  வரும்  10வது  மலேசியத்  திட்டத்தில்  தண்ணீர்  குழாய்களைப்  பழுதுபார்க்க  ஒதுக்கப்பட்ட  தொகை  வெறும்  ரிம975 மில்லியன்  மட்டுமே  என்று  அது   கூறிற்று.

அதற்கு ங்கா, இந்த  வேகத்தில்  போனால்  அத்தனை  குழாய்களும்  2070-இல்தான்    சீரமைத்து  முடிக்கப்படும்  என்றார்.

பல  நாடுகள்  உண்மையிலேயே குடிநீரின்றி  அவதிப்படும்போது  மலேசியாவில்  தண்ணீர்  தொடர்ந்து  விரயமாக்கப்படுவது  “பாவச்  செயலாகும்”  என்று  அவர்  சொன்னார்.