கேஎல்ஐஏ2-இல், சில இடங்கள் அமிழ்ந்து போயிருப்பது “அனைத்துலக ஜோக்” ஆக மாறி உள்ளது. ஆனால், அதிகாரிகள் அது ஒரு மோசமான பிரச்னை என்பதைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள் என டிஏபி எம்பி ஒருவர் கூறினார்.
அவ்விமான நிலையத்தின் தகுதி பற்றி முழு அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் தாக்கல் செய்யுமாறு நான்கு வாரங்களுக்கு முன்பே மலேசிய விமான நிலைய ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்டிடம் கூறப்பட்டது என்றும் அது இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் டோனி புவா கூறினார்.
விமான நிலைய ஊழியர்கள், விமான நிலையத்தின் தாழ்வான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் நீரை அள்ளி அள்ளி சாக்கடைகளில் கொட்டுவதைக் காண்பிக்கும் காணொளிகள் யு-டியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அறிக்கை தாக்கல் செய்யாதது பற்றிக் குறிப்பிட்ட அந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி, அதிகாரிகள் எதையாவது மூடி மறைக்கப் பார்க்கிறார்களா எனவும் வினவினார்.
இது பூகம்பத்தினால் வந்த வினை என்று சொல்லாமல் இருந்தால் சரி. உலகமே நம்ப KLIA 2-ஐ பார்த்து சிரிக்காம இருந்தா சரி.
பில்லியன் கணக்கில் பணத்தை விழுங்கிய அரசாங்கத் தலைவர்களின் வண்டவாளம் விமானத் தண்ட வாளத்தில் ஏறிவிட்டது.
அன்வார் செய்த சதி என்று சொல்லவில்லையா?
எது என்ன நடந்தாலும் இந்த ஊழல்வாதிகளுக்கு ஒன்றும் நடக்காது.சீனாவில் நிற்க வைத்து சுடுவது போல் செய்தால் தான்.
இந்த அசிங்கமான குத்தகை வேளை யாருக்கு கிடைத்தது என்று சொல்ல மாட்டர்கள்
இங்கே பயனிகள் நீச்சல் அடிக்க முடியுமா .
ADE எங்கப்பா ,எம்மா பெரிய நீச்சல் குளம் ,இந்த மாதிரி பெரிய நீச்சல் குளத்தை நான் பார்த்ததே இல்லை ,ம்ம்ம் வாருங்கள் போயி நீச்சல் அடிக்கலாம்
இலவச நீச்சல் குல வசதி செய்து கொடுத்த கே.எல்.ஐ.ஏ.11,க்கு நன்றி சொல்ல வேண்டும் பயணிகள்,நாராயண நாராயண.
MH75: KLIA2! KLIA2! this is MH 75 (seven five) permission for landing pls……
KLIA2: MH seven five you may land on our world first submerged runway 1Lima…..
இந்த KLIA 2 ஒரு அனுபவம் இல்லாதா கம்பனி செய்திருக்க வேண்டும் சென்ற வாரம் இங்கிருந்து நான் வெளியூர் சென்றேன் ஓடுபாதை ஓரத்தில் பல இடங்களில் குட்டையில் தண்ணீர் இருபது போல் இருந்தது .இதில் எவளவு பணம் சுருட்ட பட்டதோ ?ஏன் இங்கு திறமை சாலிகள் இல்லையா ?வெக்க கேடு !!!! இனி இங்கு விமானம் கூட நீச்சல் அடித்து தான் ஏறி இறங்க வேண்டும் !!!!
4 பில்லியன் விமான நிலையம் காட்டிய நிறுவனம் எது . மக்ககள் பணம் தண்ணீரில் மிதக்குது .என்ன கொடுமை இது .