ஜைட்: மலேசியா ஐநாவிலிருந்து விலகி ஐஎஸ்-ஸில் சேர்வதே மேல்

zaidஅரசாங்கத்தால்  தாராண்மைவாதத்தை  ஏற்க  முடியாவிட்டால்  அது  ஐநாவிலிருது  விலகி  இஸ்லாமிய  அரசு  (ஐஎஸ்) என்னும்  கிளர்ச்சி  இயக்கத்துடன்  சேர்வதே  மேல்  என  ஜைட்  இப்ராகிம்  கூறுகிறார்.

“ஐநா-விலும்  பாதுகாப்பு  மன்றத்திலும்  உறுப்பு  நாடாக  இருந்தால்  தாராளமயக்  கொள்கை  கொண்ட  உலகை  நீங்கள்  ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்  என்றுதான்  அர்த்தமாகும்.

“மனித உரிமை, சிறுபான்மையினர்  உரிமைகள்,  மகளிர்  உரிமைகள்  ஆகிய  கோட்பாடுகளின்  அடிப்படையில்  அமைந்ததுதான்  ஐக்கிய  நாடுகள்  அமைப்பு”, என  அந்த  முன்னாள்  நடப்பில்  சட்ட  அமைச்சர்  கூறினார்.

இஸ்லாமிய  தாராண்மை  வாதத்தையும்  பன்மைத்துவத்தையும்  மேம்படுத்தும்  முயற்சிகளுக்கு  எதிராக   பாத்வா  பிரகடனம்  செய்யப்பட்டிருப்பதை  நீதிமன்றம்  மேலாய்வு  செய்ய  வேண்டும்  என்று மனு  தாக்கல்  செய்யப்பட்டிருப்பது  பற்றி  விளக்க  இஸ்லாத்தில்  சகோதரிகள்  ஏற்பாடு  செய்திருந்த  செய்தியாளர்  கூட்டத்தில்  ஜைட்  பேசினார்.